By: Newton Isaac

முடைநாற்றம் முகரவும், முகஞ் சுளிக்கவும் தெரியாத முஸ்லிம் அரசியல் அற்பங்கள் ! யாருக்கும் வெட்கம் இல்லை.

“வெளியே போ...போ” என்று சொல்லாமற் சொல்லும் போதெல்லாம் வெட்கங் கெட்டுப்போய் உள்ளே இருந்த ஹக்கீமும், “வெளியோ போ ..போ” என்று சொல்லியும் போகாமல் உள்ளே இருக்கும் வெட்கங் கெட்டவன் என்ற ஹக்கீமைச் சாடிய ரிசாதும் ஊவாவிலே கைகோர்க்கும்போது முஸ்லிம் சமுகம் வெட்கித் தலை குனிகிறதோ இல்‌லையோ பல்லினச் சமுகத்தின் முஸ்லிம் இனக் குழுமத்து அங்கம் என்பதால் நான் வெட்கித் தலை குனிகிறேன். “அடிப்படைவாதிகள்”, “சமூகத் துரோகிகள்” எனச் சாடிச் சாடி முகாந்தரமில்லாது வெறும் வாயைச் சப்பிக்கொண்டிருந்தவர்கள் சப்பிச் சப்பி அசை போட அவலை அள்ளித் தட்டுகிறார்கள் இந்த அரசியல் மூன்றாந் தரங்கள். 

 Fauzer Mahroof

எங்கே ? முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரையும் காணோம்....

மகிந்தவின் நிறைவேற்று அதிகாரத்தில் 

மும்மாரி பொழிந்து... நாடும் குடி மக்களும்

சகல சௌபாக்கியமும் பெற்று வாழ்கிறார்கள் என 

இந்த நேரத்தில் அரசவையில் (அமைச்சரவையில்)

சிரம் பணிந்து அமர்ந்து சாமரம் வீசிக் கொண்டிருப்பார்களோ....

பாதிக்கப்பட்ட மனோநிலையில் (victim mentality) இருந்துகொண்டு பெரும்பான்மை சமூகத்திலிருந்து வரும் முற்போக்கான முயற்சிகளையும் சந்தேகக் கண்கொண்டு மாத்திரம் நோக்கும் நிலை ஆரோக்கியமாக இல்லை.

Authorization