............................................................................................................................................................................
முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு பொதுவான பிரச்சினை ஏற்படும்போது அல்லது ஏற்படுத்தப்படும்போது, எமது சமூகம் ஒற்றுமையாக இயங்காது, இயக்கவாதத்தை தூக்கி பிடிப்பது மிகவும் துரதிஸ்வசமானது.
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல" , இது தப்லீக் ஜமாஅத் பள்ளி, தௌஹீத் ஜமாஅத் பள்ளி என்றெல்லாம் பிரிந்து செயற்படுவது , முஸ்லிம்களை காவு கொள்ள முயற்சிக்கும் கூட்டதுக்கு நல்ல தீனியாக அமைந்து விடும்.
முடிவு, பெரிதாக கட்டிய மூன்று மாடி பள்ளிவாசலை இழந்து விட்டோம். ஒரு சிறிய, பழைய பள்ளிவாசல் தீர்வோடு அடங்கி விட்டோம். அரச மரம் அவ்விடத்தில் இருப்பதனால் அதன் ஆயுள்காலமும் மிக குறைவானது போலவே தென்படுகிறது.
அரசியல், சமய(இயக்க) பிரிந்து செயற்படும் காலமெல்லாம், இந்த நாட்டில் இன்னும் எதை எதை இழக்க போகிறோமோ அந்த ரஹ்மானே அறிவான்.
சகோ Rameez Aboobacker, இங்கு பிரச்சினை பல இயக்கங்கள் இருப்பதன்று. எமது நாட்டில் நாம் பங்களிப்புச் செய்ய வேண்டிய துறைகளைப் பட்டியலிட்டால் எமக்கு இன்னும் 1000 இயக்களாவது தேவைப்படலாம்.
இங்கு உண்மையான பிரச்சினை சமகால இஸ்லாமிய இயக்கங் களிடையே சமூகப் பங்களிப்புக்கான தெளிவான இலக்குத் தெளிவோ சமூகத்தின் மனோநிலையைப் புரிந்து செயற்படும் வழிமுறைகளோ பொருத்தமான வளங்களோ இல்லாதது ஒரு பக்கம். தம்மிடையே சரக்கு இல்லை என்பதனை முன்வைப்பதன் மூலம் தத்தமது பொருளாதார நலன்பாதிக்கப்படும் என்ற பயம் இன்னொரு புறம்.
இதனைத் தீர்ப்பதற்கான ஒரே வழி இவ்வியக்கங்களுக்கு நிதி ஆதரவு கொடுக்கும் வியாபார சமூகத்தையும் வெளிநாட்டு நன்கொடையாளர் களையும் ஒவ்வொரு இயக்க அங்கத்தவர் களையும் அறிவூட்டுவதே.
இது தவிர மாற்று வழிகள் குறுங்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
Leave a comment