Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

இஸ்லாமிய இயக்க பெண்கள் பிரிவினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள்

(0 votes)
இஸ்லாமிய இயக்க பெண்கள் பிரிவினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள்
29 February
2012
Written by:

எமது இஸ்லாமிய இயக்கங்களில் பெண்கள் பிரிவினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களாகப் பின்வருவனவற்றைக்குறிப்பிடலாம்.

 

1. தஃலீம் வாசிக்கும் மஜ்லிஸ்கள்,

 2. தஜ்வீத் முறைப்படி குர்ஆன் கற்றுக்கொடுக்கும் ஒழுங்கு,

 3. வருடாந்த பெண்களுக்கான இஜ்திமாக்களை நடாத்தல்,

 4. ஜனாஸாக் குளிப்பாட்டல் குறித்த பயிற்சி வகுப்புகளை நடாத்தல்,

 5. சிறுவர்பள்ளிக் கூடங்களில் கற்பித்துக் கொடுத்தல்,

 6. ஹல்கா சந்திப்புகள்,

 7. பெண்களுக்கான மத்ரசாக்களை ஸ்தாபித்தல்,

 

இது தவிற வேறு ஏதாவது செயற்திட்டங் இஸ்லாமிய அமைப்புக்களால் முஸ்லிம் பெண்களுக்கென்று நடாத்தப்படுகின்றனாவா? இவற்றுள் முஸ்லிம் பெண் புத்திஜீவிகளின் பங்களிப்பு எத்தகையது?

 நீங்களறிந்த இஸ்லாமிய அமைப்புக்களால் பெண்களுக்கொன்று மேற்கொள்ளப்படும் வேறு செயல்திட்டங்கள் ஏதும் இருந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளவும்.

 

  • Irfaan Bin Jaward · 20 mutual friends
    பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் போதிக்கின்ற ஆசிரியர்களுக்கான Teaching training programs..
     
  • Abdul Raheem Mohamed Inas  சுருக்கமாக நேரடியாக சொல்ல முடியுமா இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.
    இயக்கங்கள் பெண்களுக்கு உரிய இடத்தை வழங்கவில்லை என்றா?
    அல்லது இப்படியானவற்றை பெண்கள் செய்வது அவர்களின் நிலையை தாழ்த்தும் என்றா?
     
  • Abdul Samad Mohamed Akram  உம்மு ஹனா, கோபப்படாமல் ஒரு விடயத்தை சொல்லுங்கள் இஸ்லாமிய இயக்கங்களில் பெண்கள் பிரிவுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் என நீங்கள் மேலே அடையாளப்படுத்திவை மட்டும்தான் உங்களுக்குத் தெரியுமா? அல்லது அதைவிட இன்னும் தெரியுமா? இவ்வளவுதான் என்றிருந்தால் இயக்கங்களில் வழிகாட்டல் வறுமையுள்ளது என்ற உங்களது வாதம் உங்களாலேயே முறியடிக்கப்படுகிறது
     
  • Ummu Hana  இங்கு கோப்படுவதற்கு எதுவுமில்லை சகோதரரே. ஆரம்பத்தில் இஸ்லாமிய அமைப்புக்களின் பெண்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து தொகுத்துவிட்டு அதற்குப்பிறகு இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் தனியான கருத்தாடலைக் கொண்டு செல்ல நினைக்கின்றேன்.

    நான் ப
    ட்டியலிட்ட நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக நீங்கள் அறிந்து வைத்துள்ள இஸ்லாமிய இயக்கங்களில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் இடம்பெறுமானால் எம்முடன் பிகிர்ந்து கொள்ளவும்.

    எந்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தையும் சிறுமைப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. எமது கருத்தாடல்கள் அனைவருக்கும் வளம்சேர்க்கும் என்பது எனது அபிப்பிராயம்.
     
  • Abdul Samad Mohamed Akram  நல்லது முயற்சியைத் தொடருங்கள், ஆனால் ஒரு விடயத்தை தொட்டுக் காட்ட நினைக்கிறேன், நிகழ்ச்சித் திட்டரீதியில் ஏன் சிந்திக்கிறீர்கள்? இதனை ஏன் இலக்கு மையப்பட்ட வகையில் அணுக முடியாது? ஒரு நிகழ்ச்சித் திட்டம் ஏன் உருவாக்கப்படுகிறது, இயக்கத்தினுடைய இலக்கை அடையவே உருவாக்கப்படுகிறது, எனவே இலக்கு என்ன என்பதை வைத்தே நிகழ்ச்சித் திட்டம் அமையப் போகிறது.நீங்கள் நிகழ்ச்சித் திட்டங்களைத் தொகுப்பதால் மாத்திரம் சரி பிழைகளை அடையாளம் காணமுடியாது
     
  • Faslun Nihara  இயக்கம் என்பது அதில் இருக்கும் அங்கத்தவர்களுக்கு மட்டுமா? அப்படி அவர்களுக்கு மட்டுமாக இருந்தால் வெளியில் இருக்கும் மற்றவர்களுக்கான உங்களது திட்டம் என்ன? உங்களது இயக்கத்தில் இலக்கு சம்மந்தமாக விளக்க முடியுமா?
     
  • Sanaya Banu  இயக்கங்களாக வேலை செய்வது இன்று எமது நாட்டிற்கு பொருத்தமானதுதான? என்னை பொறுத்தவரையில் இயக்கங்களின் வேலைத்திட்டங்கள் ஒரு மிகவும் சுருங்கியதாகவே உள்ளது. சமுக விடையங்களில் அதனது பங்களிப்பை காண முடியவில்லை. பெண்களுக்கான நிகழ்ச்சி நிரல்களும் போதுமானதாக இல்லை.
     
  • Abdul Samad Mohamed Akram  ஒரு இயக்கம் தொழிற்படும் ஜந்து தயங்களில் ஒன்றுதான் சமூகத்தளம், எனவே ஒரு தளத்தை மாத்திரம் அவதானித்து விட்டு அதிலும் வெளியில் இருந்து அவதானித்து விட்டு தீர்வு சொல்வது அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை எனக்கு
     
  • Ummu Hanaவெளியிலிரந்து இஸ்லாமிய இயக்கம் குறித்த சமூகதள மட்டத்திலான ஆய்வுகளின் உண்மைத் தன்மையை இஸ்லாமிய இயக்கங்களின் உள்ளிருப்பவர்கள் தமது உண்மையான நிலைப் பாட்டையும் கருத்தையும் முன்வைப்பதன் மூலம் எதிர் கொள்வதுவே மிக ஆரோக்கியமான ஒரு அனுகு முறையாகும்.
     
  • Mohammed Kamaruzaman · 21 mutual friends
    இயக்கத்தில் வெளியே இருந்து விமர்சிக்க கரணம் வெளியில் இருப்பவர்களுக்காக எந்த வேலையும் இல்லாமைதான். நபியவர்கள் 73 பிரிவுகளாக பிரிவதை தடுத்து இருக்குறார்கள். இஸ்லாம் கூட்டகலாக பிரியும் என்றுதான் சொல்லியிருக்குரார்கள். பிரிய சொல்லவில்லை.
     
  • Aqmal Ah'san · Friends with Azeem Salam and 14 others
    அல்ஹம்துலில்லாஹ்.
    கூறுகிறேன் என்று தவறாகக்ருத வேண்டாம். மேல் உள்ளவை அணைத்தும் இன்னும் பாரம்பரிய அல்லது ஒரு சிறந்த அடைவை எதிர்பார்க்க முடியாத செயற்பாடுகலைத்தான் விவரீக்கின்றன.அதற்காக இவர்றை தவிர்க்க்கும்படியாக கூறவில்லை, மாறாக இவைகளை முன்னிலைப்படுத்த்ு
    வதால் பெரிதாக ஒன்றும் சாதித்தவர்களாக மாட்டோம் என்கிறேன்.

    இஸ்லாமிய இயக்கம் எனும்பொழுது அதன் கொள்கை அனைத்தையும் விட முக்கியத்த்ுவம் பெறுகிறது. கொள்கையை அடிப்படையாக வைத்து ஆண்களாக இருக்கலாம், பெண்களாக இருக்கலாம், தங்கள் வேலைகளை ஒரு திட்டமிட்ட அடிப்படையில் உரிய காலங்களுக்குள் வகுத்து குறிப்பிட்டவர்களுக்கிடையில் அல்லது குழுக்கழுக்கிடையில் பகுர்ந்தளித்திதது கருமமாற்றும் போது தனது அடைவுகளையும், பலவீனங்களையும், ஏன் பலங்களையும்கூட தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கும்.

    பொதுவாகக் கூறுவதென்றால், வேலைகள் என்று சிலவற்றை நாங்கள் செய்யும்போது குறிப்பிட்ட அந்த வேலை ஏதும் ஒரு பயனை(output) அளிக்கின்றதா என்ற விடயத்தை கருத்தில் கொள்வது அவசியம். அதாவது குறிப்பிட்டந்த வேளையினால் களத்தில் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் நிலவுகின்றததென்றாள் மாத்திரமே அதனை ப்ரொடக்டிவ் ஆக கருத்த முடியும் என்று நினைக்கின்றேன். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு 5 பேரை தெரிவு செய்து அவர்களின் தனி ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்கில் ஒரு தொடர் பயிற்சி அளிப்பது, ஊரிலுள்ள ஏனைய நலன்புரி இயக்கங்களுடன் ஒன்று சேர்ந்து பரஸ்பர கலந்துரையாடல்களை நடாத்த்ுவதன் மூலம் இயக்கட்த்ின் பலத்தை அதிகரிப்பது, அன்றாட வாழ்வில் மனிதன் எதிர் நோக்கும் எல்லாப் பிறச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் மையமாக இஸ்லாமிய இயக்கத்தத்ை மாற்றுவது etc.

    எனது அறிவுக்கு எட்டிய விதத்தில் எனது கருத்தை முன்வைத்துள்ளேன். மேலும் பற்பல விடயங்களும் உள்ளன. சிறந்த அடைவுகளுடன் முன்னேறும் உலகின் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களின் நிகழ்ச்சிகலை ஆராய்வது பயனளிக்கும் எனக்கருதுகிறேன்.
     
Read 16474 times Last modified on Thursday, 22 August 2013 08:30
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization