Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

'கொள்கைக்காக வாழ்தலை' எவ்வாறு சமூக மயப் படுத்தலாம்?

(0 votes)
'கொள்கைக்காக வாழ்தலை' எவ்வாறு சமூக மயப் படுத்தலாம்?
12 March
2012
Written by:

'கொள்கைக்காக வாழ்தல்' என்பதனை எவ்வாறு சமூக மயப் படுத்தலாம்?

நாம் வாழும் சமூகத்தின் அனைத்து விவகாரங்களிலும் நாம் வாழவைக்க விரும்பும் கொள்கை முன்வைக்கும் சிந்தனை, அது எதிர்பாக்கும் அல்லது அடையவிரும்பும் மாற்றம் என்பன குறித்து நாம் சமூகத்திற்கு முன்வைத்தல் அவசியமாகும்.

 

  • Ummu Hana  //Mohamed Niyaz Abu Samha: Your moral, ethics and your behaviour can convey more, than what you propagate, preach and speak out by your language.//
     
  • Ummu Hana  //Abufaisal Ruh இன்னும் கொஞ்சம் தெளிவா புரியிற மாதிரி சொல்லுங்களேன்... (please don't mistake me)//
     
  • Ummu Hana  //Mohamed Niyaz Abu Samha எமது பழக்க வழக்கம், அடுத்தவர்களுடான எமது பண்பாடு என்பன நாம் செய்கின்ற பிரசாரங்களை விடவும் அதிகமாக எமது கொள்கையை எதிவைக்கும்.//
     
  • Ummu Hana  //Mohamed Fassy இஸ்லாத்தின் கொள்கைக்காக வாழ்தல், இயக்க கொள்கைக்காக வாழ்தல் என்ற இரு பிரிகையாக்கப்பட்ட கருப்பொருள்களில் அலசல் களத்தேவை.//
     
  • Ummu Hana  அரசியல், பொருளாதாரம், மருத்துவம் போன்ற அனைத்து சமூகவியல் துரைகளிகளிலும் எமது சிந்தனையை சிரியாக இனங்காணமால் வெறுமனே எமது பண்பாடு, பழக்க வழக்கங்களையும் முன்மாதிரியையும் மாத்திரம் குறை கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை
     
  • Ummu Hana  வணக்கவழிபாடுகளை அப்பியாசம் போன்று மேற் கொள்வதனை விடவும் அவ்வணக்க வழிபாடுகளில் ஓதப்படும் குர்ஆண் வசனங்கள் எம்மை சமூக விடய ங்களில் ஆராயவும் பங்களிப்புச் செய்யவும் தூண்டுவதாக இருக்கும் போதுதான் அந்த வணக்க வழிபாடுகள் இவ் வுலகத்தில் பாரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
     
  • Safiyya Zaid  main point which is we need to make big change towards a peaceful life
     
  • Ummu Eimaan  ஒரு முஸ்லிமை பொறுத்தவரை அவனது இறுதி இலக்கு இறை திருப்தியை பெறுவது மட்டுமாகும்.அவனது உலக வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் அவனது ஒரே இலக்கு இதுவாகவே இருக்கவேண்டும்.இதற்கு ரசூல் ஸல் அவர்கள் எவ்வாறு தனது சஹாபாக்களை பயிட்டுவித்தார்கள் என்பது பற்றி சொல்வது முக்கியமாகும்.
     
    இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அஹ்சாப் யுத்தத்தை குறிப்பிட முடியும்.கடும் பஞ்சம் மதினாவில் இருந்த வேளை தனது வயிறுகளில் கல்லை கட்டிக்கொண்டு யுத்த ஏற்பாடு செய்யும் போது தனது தோழர்களுக்கு சொன்ன விடயம் எல்லாம் "இந்த உலக வாழ்க்கையை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டாம்,மறுமை ஒன்றே நிரந்தரம்,அதிகம் பாவ மன்னிப்பு கேளுங்கள்"என்பது மட்டுமாகும்.
     
    நாயகம் அவர்கள் தனக்குக் கிடைத்த வெற்றி,தோல்வி இரண்டிலும் இதனயே வலியுறுத்தினார்கள்.மாறாக உலகம் சம்பந்தமாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை.உங்களுக்கு ஆளுநர் பதவி கிடைக்கும்/கிலாபாத்தை உருவாக்கலாம் இப்படியான எந்த வக்குறிதியையும் நாயகம் அவர்கள் தங்கள் தோழர்களுக்குச் சொல்லவில்லை .
     
  • Ummu Eimaan  எமக்கு வரும் அடுத்த கேள்வி இந்த இல்லக்கை எவ்வாறு சமுகமையப் படுத்தலாம் என்பது.இந்த கொள்கையிக்காக பயிற்றுவித்தல் முதலில் தனி மனிதர்களிடம் இருந்து ஆரம்பித்து இஸ்லாமிய குடும்பம் ஒன்றை உருவாக்குவதனுடே சாத்தியப்படுத்த முடியும். ஸுராஹ் கஈப் இல் வரும் குகை வாசிகள் தங்கள் காலத்தில் இருந்த ஜாகிலிய சமுகத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் எவ்வாறு குகைகளில் போய் இருந்தார்களோ அதே போன்ற நவீன ஜாகிலியத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரே வழிமுறை இஸ்லாமிய இயக்கங்களாகும்.
     
    இவற்றின் அடிப்படை கூட்டு செய்யற்ற்பாடாகும். மனிதஉரிமை/விடுதலை இயக்கம் எந்த நிறுவனம் ஆனாலும் உலக வாழ்வின் ஒரு சிறிய பகுதிக்கா போராட நிறுவன ஒழுங்கில் கூட்டாகவே செயற்படுகின்றன.மகாத்மா காந்தி,நெல்சன் மண்டேலா போன்ற உலகம் போற்றும் தலைவர்களும் கூட்டு கட்சிகளின் உடாகவே இயங்கினார்கள்.அப்படியானால் ஒரு மனிதனின் அனைத்து பகுதியான ஆண்மா,அறிவு ,உலக வாழ்க்கை இவற்றில் சீர் திருத்தம் கொண்டுவர நிச்சயம் ஒரு கூட்டு முயற்சி அவசியம்
     
  • Ummu Eimaan  இதனை எவ்வாறு சாத்தியப்படுத்தலாம் என்று பார்க்கும் போது நம் மத்தியில் பல்வேறுபட்ட இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன.அவை வேறு வேறான வழிகளின் உடாக இறுதி இலக்கை அடைய பாடுபடுகின்றன.சலபிக்கள் பித்யத்தை ஒழிக்க பாடுபடுகிறார்கள்.அதுபோல் தப்லீக்கை பொறுத்தவரை இபாதத் பகுதிக்கு முக்கியம் வழங்குகின்றனர்.
     
    மாறாக இக்ஹ்வான்களும்,ஜமாயத் இஸ்லாமியும் இஸ்லாம் சம்பூர்ண வாழ்க்கை திட்டம் என்ற வகையில் ஒரே தன்மையை கொண்டிருந்தாலும் தனி மனிதனை பயிற்றுவிக்கும் முறைகள் வேறாக இருக்கின்றன.இங்கு தனி மனிதனை சிறந்த முறையில் பயிற்றுவித்து அதனுடாக இஸ்லாமிய குடும்பம் ஒன்றை உருவாக்குவது உடாகவே ஒரு ஆரோக்கியமான சமுகத்தை உருவாக்குவதே நடை முறை சாத்தியமாகும்.
     
  • Ummu Hana  சகோதரி Ummu Eemaan //எமக்கு வரும் அடுத்த கேள்வி இந்த இல்லக்கை எவ்வாறு சமுகமையப் படுத்தலாம் என்பது.இந்த கொள்கையிக்காக பயிற்றுவித்தல் முதலில் தனி மனிதர்களிடம் இருந்து ஆரம்பித்து இஸ்லாமிய குடும்பம் ஒன்றை உருவாக்குவதனுடே சாத்தியப்படுத்த முடியும். //

    இங்
    கு பயிற்றுவித்தல் எங்கிருந்து ஆரமிபிக்கப்படல் வேண்டும் என்பதற்கு முன்பு பயிற்றுவித்தல் என்பதால் எதனைக் குறிப்பிடுகின்றோம் என்பது பற்றிய கடும் தெளிவுக்கு வந்தாகல் வேண்டும்.

    இதனையே சிந்தனை மற்றும் கொள்கைரீதாயன தெளிவினைப் பெறல் என்பதன் மூலம் குறிப்பிடுகின்றேன்.
     
  • Safiyya Zaid  yes sis ummu hana u r correct.
     
  • Ummu Eimaan  ஒரு வைத்தியர் ஆக வேண்டும் என்றால் மிகவும் கஷ்ட்டப்பட்டு ஒரு ஆசான் முன் படிக்க வேண்டும்.அதோடு போதும் என்றால் இல்லை முடியாது.தானும் முயற்சி செய்தாக வேண்டும்.அடுத்து பல்கலை கழகம்.அங்கு வகுப்பறை கல்வியோடு கூடிய நோயாளர்,வைத்தியசாலை முழு நேர பயிற்ச்சிகள் அவசியம்.எமது வாழ்வின் ஒரு தேவைக்கே இவ்வளவு படிப்புகள் ,பயிற்ச்சிகள் வேண்டும் போது மனிதனின் அனைத்து கட்டங்களிலான விழுமியங்களையும் பாதுகாக்க அவனை பண்படுத்த சாதாரண ஒரு நாள் நிகழ்ச்சித்திட்டமோ,ஒரு நாள் பாடமோ,ஒரு கலந்துரையாடலோ போதும் என்றா நினைக்கிறீர்கள்?
     
  • Umaira Noorul Hamza · 31 mutual friends
    இஸ்லாமிய கொள்கைக்காக வாழ்ந்து அந்தக் கொள்கையை சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் வாழவைகின்ற பணிதான் இஸ்லாமியப் பணி.அதை நாம் ரசுளுல்லாஹ்வின் சீறாவில் தெளிவாகக் காண்கின்றோம். இஸ்லாமிய கொள்கையை சில துறைகளில் மாத்திரம் நடைமுறைப் படுத்துவது முழுமையான இஸ்லாமியப் பணியாக இருக்க முடியாது.கொள்கையை சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் வாழவைக்க முன் கொள்கை பற்றிய தெளிவான கலப்படமற்ற அறிவும் தெளிவும் அவசியம். அடுத்து அக்கொள்கை முதலில் தன்னை ஆழவேண்டும் பிறகு அது சமூகத்தை ஆழவேண்டும்.
     
    ஒரு அறிஜர் இவ்வாறு கூறினார்
     
    "உங்களது உள்ளங்களில் ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நீங்கள் நிலைநாட்டுகின்ற போது அது தானாகவே உங்களது நாடுகளில் நிலை நாட்டப் படும்"... Via Irfan Shihabdeen
     
  • Ummu Hana  //"உங்களது உள்ளங்களில் ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நீங்கள் நிலைநாட்டுகின்ற போது அது தானாகவே உங்களது நாடுகளில் நிலை நாட்டப் படும்"... // இதன் பொருள் சிந்தனை மற்றும் கொள்கைத் தெளிவைக் குறிக்காதா?
     
  • Marx Anthonisamy நமது வாழ்வின் கொள்கைகளை எல்லோரும் விளங்கிக் கொள்வதுபோல நமது வாழ்க்கை அமையட்டும். அதைவிட முக்கியம் மற்றவர்களின் வாழ்க்கைக் கொள்கையை நாம் உணர்ந்து, ஏற்று, மதிப்பது.
     
Read 66232 times Last modified on Sunday, 25 August 2013 19:38
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization