Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம் Featured

(0 votes)
குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்
28 October
2014
Written by:

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?"

குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என நினைக்கிறேன். ஆனால் இன்று கண்டதுபோது ஒரு வித்தியாசமான அனுபவத்தை முதன் முறையாகத்தான் காண்கிறேன். ”கேள்வியும் நாமே, பதிலும் நாமே” என்பது போல அமைந்திருந்தது நண்பர் ஹாஜா ஸஹாப்தீன் அவர்களின் ஆக்கம், அதற்கு அவரே எழுதிய கருத்துக் குறிப்புத்தான் அந்த வித்தியாசமான அனுபவம்.

நண்பர் ஹாஜா ஸஹாப்தீன் அவர்களின் சொந்தக் குறிப்பை மீண்டும் உங்களின் கவனத்துக்குக் கொண்டு வருதற்காக நான் பிரதி செய்த பின்வரும் குறிப்‌பின்பால் உங்கள் அவதானங்களை ஈர்கிறேன். ஒரு முறை அல்லது வேண்டுமானால் அதற்கு மேலும் வாசித்துக் கொண்ட பின்னர் எனது இந்த ஆக்கத்துக்கு வாருங்கள்.

“எனது மகளை காலையில் கடமைக்காக குவைத் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும்போது ''வாப்பா அங்க பாருங்கள். பஸ்களும் வாகனங்களும். இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" என்ற போது எனக்கும் அதே ஆதங்கம்தான் ஏற்பட்டது. இன்ஷா அல்லாஹ் நமது கருத்துப் பரிமாறல்கள் ஆரோக்கியமான நிலையை அடையுமென்றால் வைத்தியசாலையின் கட்டிடங்களை இடமாற்ற முடியாவிட்டாலும் பணிகளை விஸ்தரிக்க வாய்ப்புக் கிடைக்குமா? அதற்கான வழிகள் உள்ளனவா என காத்திருப்போம்.” 

(ஓடுமீன் ஒடு உறுமீன் வருமளவும் காத்திருந்து குடல் வற்றிச் செத்ததாம் கொக்கு”)

ஆடிக்கொரு தரம், கோடைக்கு ஒரு தரம் நடக்கும் பெரும்பாலும் யாருடையதோ கண்சிகிச்சை முகாம்களைத் தவிர மற்றெல்லா நேரங்களிலும் மாலை 3 மணி முதல் 7 மணி வரையில் நடத்தப்படும் தர்ம ஆஸப்திரியாக குவைத் வைத்தியாலை இயங்கவதோடு மற்றெல்லா நேரங்களிலும் வெறுமையாகக் கிடக்கிறது என்று எத்தனை முறை சொல்லிவிட்டோம். காழ்ப்புணர்வின் காரணமாகக் கக்கப்படுகின்ற விஷமத் தனம் என்று சொன்ன சகோதரர்கள் இந்த நடு நிலைமையான, என்றும் நியாயத்தை மட்டும் பேசுகின்ற , அநியாயம் ஒன்ற நடக்கக் காணும்போதெல்லாம் உடல் நடுங்கிக் கண்கள் சிவக்க சினங்கொள்ளும் கூருணர்வுள்ள நண்பர் ஹாஜா ஸஹாப்தீன் அவர்கள் கொண்டுவந்துள்ள சாட்சியத்துக்கு என்ன சொல்லப்‌ போகிறார்கள் என்று முதலில் கேட்டு வைத்த விரும்புகிறேன்.

 

“எனது மகளை காலையில் கடமைக்காக குவைத் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும்போது………”

இந்த வரிகளைப் பார்க்கும்போது நண்பர் ஹாஜா ஸஹாப்தீனின் அன்பு மகள் அந்த வைத்தியசாலையில் பயிற்றப்பட்ட தாதியாக கடமை புரிபவர் என்ற உணர்வை வாசகர்களுக்குத் தருகிறது.

ஆனால் அதன் பிறகு வரும் இந்த வரிகள்....

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?"

நாம் முன்னர் சுட்டிக் காட்டியது போல பிரசித்திபெற்ற தமிழ் நாட்டின் மதுரை மீணாட்சி அம்மன் மிஷன் வைத்தியசாலையில் குவைத் வைத்தியசாலையின் நிதி வழங்குனர்களின் பாரிய பணச். செலவில் பயிற்றப்பட்டு பின்னர் குவைத் வைத்தியசாலைாயின் தகுதியற்ற, அல்லது திறமையற்ற நிருவாகம் காரணமாக அது மூடப்பட்டு அதன் விளைவாகத் தொழில் இழந்து வீட்டில் இருப்பவர்களில் அவரும் ஒருவர் என்ற உண்மை புலப்படுகிறது.

சற்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் அந்தப் பிள்ளை உங்களில் ஒருவருடைய பிள்ளையாக இருந்தால் அதன் உயர் கல்வி பாழாக்கப்பட்டதை நினைத்து எவ்வளவு வருத்தப்படுவிர்கள். நீங்கள் வருத்தப்படுகிறிர்களோ இல்லையோ நானாக இருந்தால் காலா காலமாக அந்தப் பழி பாவத்தைச் செய்தவர்களை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பேன்.

இன்று எந்தெந்த புத்தளத்து முஸ்லிம் பெண் பிள்ளை அழகாக சிங்களம் பேசுகிறதோ அதற்கான காரண கர்ததா இந்த ஹாஜா ஷஹாப்தின் என்பது மறுக்கப்பட முடியாத யதார்த்தம். கிழக்கிலங்கையில் ஒரு பழமொழி சொல்வார்கள் ”பரிசாரியார் பொண்டாட்டி புழுத்துச் செத்தாளாம்” என்று நன்றாக படிக்கக்கூடிய தியமையான ஒரு பிள்ளையின் படிப்பை இடை நடுவே பாழாக்கி, தென் இந்தியாவுக்குத் தாதிப் பயிற்சிக்காக அனுப்பி, பின்னர் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்ற நிலைக்கு ஆழாக்கிய துரோகத்தனம் அல்லது பழி பாவம் இவர்களை சும்மா விட்டு விடுமா?

இங்கு சில படுபாதகமான சமூக அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன.

1) ஸகாத் நிதியத்தில் இருந்து தாதிகள் பயிற்சிக்காக வழங்கப்பட்ட மில்லிய்ன கணக்கான ரூபா பாழ்படுத்தப்பட்டுள்ளது.

2) அப்படி பயிற்றப்பட்ட தாதிகள் சடுதியாக பணி நீக்கம் செய்யப்பட்டபோது அவர்களுக்கு நியாயமான நட்ட ஈடு கொடுக்கப்படவில்லை.

3) அவர்களுக்குச் சேர வேண்டிய உழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவு, ஊழியர் நம்பிக்கை நிதியக் கொடுப்பனவு என்பவை கொடுக்கப்படாது ஏமாற்றப்பட்டதோடு ஜாமிய்ய நழீமியாவில் மார்க்கம் கற்ற ஒரு உதவி தொழில் ஆணையாளரின் உதவியுடன் அந்த ஊழியர்கள் அநியாயமாகக் கைவிட்பட்டுள்ளார்கள்.

4) இந்த அநியாயத்துக்கு ”ஸ்ரீஜஇ” இன் முதன் நிலை பதவி தாங்குநரான ஒரு ஆயுர்வேத வைத்திய கலாநிதிக்கு எதிராக குற்றஞ் சாட்டப்பட்டு நிறுவனத்தின் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவர பாதிக்கப்பட்டோர் கொழும்பு சென்றபோது அவர்களின் மனக் குறைகளைக் கேட்ட அந்த நீதி வழுவா தலைவர் சொன்ன பதில் “ஏற்கனவே உங்கள் நன்மைத் தட்டுகள் கீழே உள்ளன. நீங்கள் அந்த பெரிய மனிதருக்கு எதிராக சாட்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டக்களால் உங்கள் நன்மைகள் எடுக்கப்பட்டு, அவருக்குக் கொடக்கப்பட்டு அவரின் நன்மைத் தட்டு மேலே போகும் என்பதாகும்.

5) இந்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின் வெறுமனே இரத்தப் பரிசோதனை நிலையமாகச் செய்றபட்ட தனியார் நிலையம் ஒன்று இலங்கை முதலீட்டு சபை வியாபாரச் செயற்பாட்டின் கீழ் ஒரு தரமான தனியார் வைத்தியசாலையாக , பாரிய வங்கிக் கடன் மூலம் அமைக்கப்பட்ட அது இப்போது வடமேல் மாகாணத்திலே யே மிகச் சிறந்த தனியார் வைத்தியசாலையாகத் தெரிவு செய்யப்பட்டது. அந்த வைத்தியசாலைக்கு உடம்புக்கு நோகாமல் தூக்கிக் கொடுப்பது போல விலை மதிக்க முடியாத மனித வளத்தைத் தாரை வார் த்துக் கொடுத்து விட்டார்கள். அந்த தனியார் வைத்திய மனைக்கு அப்படியொரு தாதிப் பயிற்சியை இந்தியாவில் பெற்றுக் கொள்வது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. குவைத் வைத்தி்யசாலை ஸகாத் நிதியத்தின் அன்பழிப்பு, அந்த தனியார் வைத்தியசாலை பாரிய வட்டியுடன் கூடிய வங்கிக் கடன் மூலம் பெறறப்பட்ட முதலீடு.

யா ரஸுலுல்லாஹ் உங்கள் கைர் உம்மத்து.........!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வடமேல் மாகாணத்தின் சிறந்த தனியார் வைத்தியசாலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதுடன், வைத்தியர்கள், உதவி வைத்திய, சிறுபணி ஆளணியினர் அணிகுத்துச் செல்ல , வாகனங்கள் பின்தொடர நகர மத்தியில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த அந்தக் காட்சிக்கு நானும் ஒரு சாட்சியம். இங்கே உடம்புக்கு நோகாமல் கி‌டைத்த ஸக்காத் பணத்தில் கட்டப்பட்டு நெடுங்குளத் தொங்கலில் பரிதாமாகமாகக் காட்சி தரும் வெறுங் கோயிலை நினைக்கும்போது இதயம் பத்திக்கொண்டு எரிகிறது. எமக்கு வேதைனை. இதைச் வெளியே கொண்டு வர யாராவது நினைத்தால்

”அவங்கவங்க இஸ்டம்போல நம்மை

அநியாயம் பண்ணுவாங்க

ஆழுக்காளு நாட்டாமை 

நம்மை ஆளவச்சு அடிப்பாங்க. 

அதைச் சொன்னா வெக்கக் கேடு

சொல்லாட்டி மானக் கேடு 

அண்ணே அண்ணே சிப்பாயண்னே

நம்ப ஊரு நல்ல ஊரு

இப்ப நல்லா கெட்டுப் போச்சண்ணே

இந்தத் து‌ரோகச் செயலை நண்பர் ஹாஜா ஸஹாப்தீன்தான் இப்போது அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இதை நாங்கள் பின்னொரு நாளில் பாவிக்க வைத்திருந்த ஆயுதமாகும். ஆனால் அதை நண்பர் ஹாஜா ஸகாப்தீன்தான் வெளியே இழுத்து வந்தார்.

இப்படி நற்றாற்றில் கைவிடப்பட்ட பிள்ளைகளை அவ்ஹவப்போது அரபிகள் இந்த வைத்திய சாலையைப் பார்க்க வருமை்போதும், பிற நிறுவனங்களின் மருத்துவ முகாம்கள் நடாத்தும்போதும் தற்காலிகமாக வேலைக்க எடுத்து நிதி கொடுத்தோரையும், புத்ளத்து சமூகத்தையும் பிழையான வழியில் அனுப்பகிறார்கள். மொத்தத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கறி வேப்பிலைகள். தன்னிடமே வேதனைகளை வைத்துக்கொண்டு எமது கேள்விகளுக்க விடை தரத் தெரியாது தினறிக் கொண்டிருந்தவர்களுக்கு கொஞம் அவலை அள்ளி வாயில் போட்டுள்ளார் நண்பர் ஹாஜா ஸஹாப்தீன். ”காப்பாற்ற சிலபேர் பிறந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் இருப்பதைத் தவிர்க்க முடியாதே.

ஹாஜா ஸஹாப்தீன்தான்!

உள்ள‌தெல்லாம் சொலிவிட்டேன்

செய்யிறதே செஞ்சிருங்கோ 

நல்லதுன்னா கேட்டுங்கோ

கெட்டதுன்னா விட்டுடுங்கோ

Read 153837 times Last modified on Friday, 16 June 2017 16:42
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization