Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

இனத்துவ அரசியல் தொடர்பில் மனோ கணேசனும் உம்மு ஹனாவும்

(0 votes)
இனத்துவ அரசியல் தொடர்பில் மனோ கணேசனும் உம்மு ஹனாவும்
17 October
2013
Written by:
  1. கடந்த மாகாண சபைத் தேர்தலில் (2013) சிங்கள இனவாதக் கட்சிகள் தோல்வி கண்டமை தொடர்பில்...
  2. இலக்கு நிர்ணயிக்கப்படாத அரசியல் பயணத்தின் அபாயம் தொடர்பில்...
  3. இலங்கையில் சிறுபான்மை மக்களிடையே ஊக்குவிக்கப்படும் இனத்துவ அரசியலின் பின்னால் உள்ள அபாயம் தொடர்பில்..
  4. இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தில் அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்தல் தொடர்பில்

 

1. கடந்த மாகாண சபைத் தேர்தலில் (2013) சிங்கள இனவாதக் கட்சிகள் தோல்வி கண்டமை தொடர்பில்...

Mano Ganesan

அதிகம் வெளியில் வராத இன்னொரு உண்மை இருக்கின்றது. நடந்து முடிந்த மத்திய மாகாண, வட-மேற்கு மாகாண தேர்தல்களில் போட்டியிட்ட சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுன ஆகிய கட்சிகளை சேர்ந்த ஒரு வேட்பாளர்கூட வெற்றிபெறவில்லை. அனைவரும் படுதோல்வி அடைந்து விட்டார்கள்.

சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாற்ற கிளம்பியுள்ளதாக சொல்லிக்கொள்ளும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன ஆகிய சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகளின் வேட்பாளர்களை சிங்கள மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.


Mano Ganesan

இந்த நாட்டில் இன்று இனவாதம் தோல்வியடைந்து வருகின்றது. உங்களது இனவாத கூட்டு கட்சிகளின் கருத்துகளும், பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் கூச்சல்களும் மக்களை சலிப்படைய வைத்துள்ளன.

கடந்த சில மாதங்களாக நான் அநேகமான சிங்கள ஊடக நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றேன். அனைத்து நிகழ்வுகளிலும் சிங்கள மக்கள் நான் சொல்லும் கருத்துகளை புரிந்து கொண்டு வருவது எனக்கு மிக தெளிவாக தெரிகிறது.

 

2. இலக்கு நிர்ணயிக்கப்படாத அரசியல் பயணத்தின் அபாயம் தொடர்பில்...

  Mano Ganesan

"என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது......" சந்திரபாபுவின் இந்த ஒரு பாடல் அசந்தர்ப்பமாய் ஞாபகம் வருகிறது .... எங்கேயோ தவறு செய்ய ஆரம்பிக்கின்றோமோ?? அல்லது அப்படி ஒன்றும் இலையோ??

(மகிந்தவின் பொறிக்குள் தமிழ் தலைவர்களும் விக்னேஸ்வரனும் சிக்குவார்களா? http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97529/language/ta-IN/article.aspx )


Ummu Hana:

தமக்கென்று தெளிவான அரசியல் இலக்கும் குறுங்கால, இடைக்கால, நீண்டகால செயற்திட்டங்களுடன் கூடிய பங்களிப்பு முறையும் இல்லாத நாணயமும் நம்பிக்கையும் நல்லெண்ணமும் மாத்திரமே தகுதியாகக் கொண்ட எந்த ஒரு அரசியல் பிரமுகரும், அரசியல் கட்சியும் பெரிதாக எதனையும் சாதிக்கப்போவதில்லை.

மேலும் இனத்துவ அடிப்பைடயிலான அரசியல் போராட்டம் இலங்கையில் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கும் பொதுவாக அனைத்து மக்களுக்கும் ஒரு சாபக்கேடு என்பதனைப் புரிந்து கொள்வோம்.

 

3. இலங்கையில் சிறுபான்மை மக்களிடையே ஊக்குவிக்கப்படும் இனத்துவ அரசியலின் பின்னால் உள்ள அபாயம் தொடர்பில்..


Mano Ganesan

 
 ...........ஆகவே இனத்துவ அரசியல் வேண்டாம் என் சொல்லும் அறிவுரையாளர்களே கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்.......!

தமிழர்கள் (அல்லது முஸ்லிம்கள்) இந்நாட்டில் எங்கெங்கு வாழ்கின்றோமோ அங்கெல்லாம் எம்மை இனத்துவ அரசியல்ரீதியாக பலப்படுத்தி கொள்ளவேண்டும். இனத்துவ அரசியல் வேண்டாம் என இன்று சிலர் எமக்கு அறிவுரை சொல்கிறார்கள். இந்த அறிவுரையாளர்களை நான் மதிக்கின்றேன். ஆனால் இவர்களுக்கு இன்று நடப்பு புரியவில்லை என்று வருந்துகின்றேன்.

இன்று இந்த “இனத்துவ அரசியல் வேண்டாம் என்ற அறிவுரை” பொருத்தமான கருத்து அல்ல. இனத்துவ அரசியல் செய்ய வேண்டாம் என்று பெரும்பான்மை இனத்துக்கு சொல்லப்படும் அறிவுரை அவர்கள் காதுகளில் ஏறுவது இல்லை. அவர்கள் (பெரும்பான்மையினர்) தங்கள் இனத்துவ அரசியலை சமீப காலத்துக்குள் விடப்போவதும் இல்லை. இந்நிலையில் நாம் எமது இனத்துவ அரசியல் கைவிட்டால் நாம் பெரும்பான்மை கடலில் கரைந்த பெருங்காயம் ஆகிவிடுவோம்.

இந்த அறிவுரையாளர்கள் ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். அதாவது நாம் எமது இனத்துவ அரசியலை செய்தால் அது இந்த நாட்டில் மென்மேலும் இன முரண்பாடுகளை தோற்றுவித்து, அழிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்கிறார்கள். இதில் உள்ள உண்மை அன்றொரு நாள் பொருந்தியது. இன்று இது காலாவதியாகிவிட்டது. இதை இந்த அறிவுரையாளர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நான் சொல்வது இதுதான். இன்று இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் கடல் கடந்து விட்டன. இன்று மெல்ல, மெல்ல உலக காவல்துறை (உலக போலிஸ்) என்ற கண்காணிப்பு வலைபின்னல் உருவாகி வருகிறது. இது உலகமயமாதலின் (உலகம் ஒரு கிராமம்) ஒரு சாதக அம்சம். இனங்களின் உரிமைகளின் சமத்துவம் உறுதிபடுத்தப்பட்டு வரும் காலம் இது.

இனத்துவ அரசியல் வேண்டாம் என் சொல்லும் இந்த அறிவுரையாளர்களுக்கு "சம உரிமைகள்" என்பதற்கும் "உரிமைகளின் சமத்துவம்" என்பதற்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடு விளங்கவில்லை. இன்று எங்கள் பாதை "சம உரிமை" என்பதை நோக்கி அல்ல. எமது நோக்கம் "உரிமைகளின் சமத்துவம்" என்பதாகும். புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!

எனவே தங்கள் மனோ இனஉணர்வுகளை, அவை எவ்வளவுதான் அவர்கள் கோணத்தில் நியாயமாக பட்டாலும், பெரும்பான்மை இனம், தனது பெரும்பான்மை வாதத்தை கைவிட்டு இறங்கி வர வேண்டிய காலம் வந்துவிட்டது. இது இன்று எம் கண் முன்னாலேயே நடக்கின்றது.

ஆகவே நாம் எமது இனத்துவ அரசியல் பலத்தை, விட்டுக்கொடுக்காமல் முன்னெடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விட்டு கொடுத்துவிட்டால் நியாயத்தை (அல்லது எமது பங்கை) பெற்றுக்கொள்ளும் எமது சந்தர்ப்பங்களும் கை நழுவி போய் விடும்.

ஆகவே இனத்துவ அரசியல் வேண்டாம் என் சொல்லும் அறிவுரையாளர்களே கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள் !

உம்மு ஹனா:

சர்நதர்ப்பவாத அரசியல் தற்காலிகமான வெற்றிகளை ஈட்டித் தரலாம். முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி என்று மார்தட்டிக்கொண்ட ஒரு காலம் இருந்தது நம் எல்லோருக்கும் தெரியும்.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் அவ்வப்போது தமக்கு கிடைக்கும் - இனத்துவ அடிப்படையிலான - தற்காலிக பேரம்பேசும் சக்தியைத் தனது அரசியல் தந்திரோபாயமாகக் கொள்வது நீண்டகாலத்தில் பிரதிகூலமான நிலைமையையே தோற்றுவிக்கும் என்பதுவே கடந்த வரலாறு கற்றுத்தருகின்ற அனுபவப் பாடமாகும்.

4. இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தில் அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்தல் தொடர்பில்...


மனோ கணேசன்:

Ummu Hana > உங்கள் பங்குபற்றலுக்கு நன்றி. நான் சொல்லவரும் விடயம் இலங்கை நாடு என்ற கோட்பாட்டில் அல்ல. ஒருவேளை உங்களுக்கு புரியும் வண்ணம் என்னால் சொல்ல முடியவிலையோ? முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகள் என மார்தட்டி கொண்டது உண்மை. இன்று அவை அப்படியல்ல என்பதும் உண்மை. ஆகவே அந்த கணக்கில் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தற்காலிக பேரம்பேசும் அரசியல் சக்திகள் தற்காலிகமான வெற்றிகளைதான் ஈட்டித்தரலாம் என்று நீங்கள் சொல்வதும் உண்மை.

ஆனால், இங்கு நான் சொல்லும் ஒரு புதிய அம்சம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதைதான் சர்வதேசம், ஐநா கண்காணிப்பு, மனித உரிமை வரைபு (HR சார்ட்டர்), சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பற்றிய வரைபு, உலகமயமாக்கல், உலக கிராமம் ஆகிய வார்த்தைகளால் நான் விளக்க முயல்கிறேன். இந்த புதிய அம்சங்கள் நாள்தோறும் புதிது, புதிதாக வளர்ச்சியடைந்தும் கொண்டுள்ளன. உலக மனித உரிமை கடப்பாடுகள் 1980 களில் எப்படி இருந்தன என்பதையும், இன்று 2013ல் எப்படி இருக்கின்றன என்பதையும் கணக்கிடுங்கள். இன்று ஒரு நாட்டின் நிகழ்வுகள் ஒரு நாட்டுக்குள்ளேயே மூடி வைத்து கொள்ள முடியாத நிலைமை மெதுவாக ஆனால் உறுதியாக உருவாகி வருகிறது. கடைசியாக இலங்கை தொடர்பில் ஐநா தோற்றுவிட்டது என்பதை உலகம் ஏற்று கொண்டுவிட்டது. இது பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு துன்ப படலம். ஆனால், அது ஐநாவுக்கு படிப்பினையை தந்து உள்ளது. அடுத்த முறை உலகில் எங்கும் ஐநா இன்னமும் கவனமாக இருந்திட அது பாடமாக அமைந்துவிட்டது.

ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம் கொண்ட நாடு ஒன்றில் சம உரிமை பொருத்தமானது. பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் கொண்ட பன்மை நாடு ஒன்றில் உரிமைகளின் சமத்துவம் பொருத்தமானது. இந்த இரண்டாவது விடயத்தில் உலகம் இன்று கண்காணிப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டு வருகிறது. இந்த பொறுப்பை எந்த ஒரு உலக நாட்டு அரசாங்கமும் உதாசீனம் செய்துவிட முடியாது. இதன் அர்த்தம் பல நாடுகள் ஒவ்வொன்றும் சிறு, சிறு நாடுகளாக பிரிந்து விட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. (அல்ல என்பதும் அல்ல). ஆனால், ஒவ்வொரு இன மத பிரிவுகள் மத்தியிலும் "உரிமைகளின் சமத்துவம்" நிலவுவதை உலகம் இன்று கண்காணிக்க தொடங்கிவிட்டது.தமிழர்கள் (அல்லது முஸ்லிம்கள்) இந்நாட்டில் எங்கெங்கு வாழ்கின்றோமோ அங்கெல்லாம் எம்மை இனத்துவ அரசியல்ரீதியாக பலப்படுத்தி கொள்ளவேண்டும். எமது இனத்துவ அரசியல் பலத்தை, விட்டுக்கொடுக்காமல் முன்னெடுக்க வேண்டும். நாம் நம்மை நமது இனத்துவ அடிப்படையில் ஒழுங்கு படுத்திக்கொண்டால் தான் நமக்காக கேள்வி எழுப்பும் அதிகாரம் உலக அமைப்புக்கு கிடைக்கும். இனத்துவ ஒழுங்கு இல்லாமல் நாம் பெரும்பான்மை கடலில் பெருங்காயமாக கரைந்துவிட்டால், இப்படி ஒரு இனப்பிரிவே இந்த நாட்டில் இல்லை என்று பதில் கூறி பெரும்பான்மை அரசு உலகை தட்டி கழித்துவிடும்.

உம்மு ஹனா:

இன்று மனித உரிமை அமைப்புக்கள் உட்பட சர்வதேச சமூகம் இரண்டு பிரதான நோக்கங்களை இலக்காகக் கொண்டுதான் தமது 'சர்வதேச பொலிஸ் நிர்வாக'த்தைக் கட்டமைத்துள்ளது.

ஒன்று: பலமான நாடுகளின் பொருளாதார நலன்,

மற்றது: சர்வதேச விவகாரங்களில் தமது தீர்மானத்திற்கும் நலன் களுக்கும் ஆதரவை ஏனைய அரசுகளிடமிருந்து பெற்றுக் கொள்வது.

மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் அப்பால் மனித உயிர்களையும் உரிமைகளையும் பாதுகாத்தல் என்ற ஒரு கருத்துநிலையில் சர்வதேச சமூகம் இல்லை. இந்த நிலைமையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டால் சர்வதேச சமூகம் குறித்த நமது மிகை மதிப்பீட்டில் இருந்து வெளிவரலாம்.  அத்துடன், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சர்வதேச சமூகம் இலங்கை,  மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் விவகாரத்தில் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பதனைக் கூட்டிக் கழித்துப்பார்த்தால், சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் நமது உரிமைகளை வென்றெடுத்தல் என்பது ஆரோக்கியமான ஒரு கருத்துநிலையாக இல்லை என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ..

#) இன்று சிரியாவில் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப் படுவதனை விடவும் பிராந்தியத்தில் தமக்கு இருக்கும் குறைந்தபட்ச பிடியும் இல்லாது போகலாம் என ரஷ்யா பயப்படுவதும் சிரியாவையும் ஈரானையும் தமது பொருளாதார ஒழுங்கை ஏற்கச் செய்வது எவ்வாறு என்பது குறித்து அமெரிக்காவினது கரிசனை யுமே முதன்மைப் படுத்தப்படுகின்றது. தமது பிராந்தியஇ பொருளாதார நலன்களுக்கு குந்தகமில்லாத விதத்தில்  தற்போதைய சிரியாவின் அதிபர் ஆஸாத்தே இருப்பினும் ஏற்றுக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் இன்று இருப்பதனையும் வெளிப்படையாகவே புரிந்து கொள்ளலாம்.

#) எகிப்தில் ஜனநாயக ஒழுங்கிலான 'இனத்துவ' அரசியல் கட்டமைப்பை விடவும் தமது பொருளாதார நலனுக்கு ஏதுவாக இராணுவ அடக்குமுறை அரசு இருக்கும் என்று கருதும் சர்வதேச சக்திகள் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை அந்நாட்டின் இறைமையுடன் தொடர்புபடுத்தி அங்கீகரிக்கும் நிலைமையை நாம் அவதானிக்கலாம்.

வெளிநாட்டு நடப்புகளை விட்டுவிடுங்கள்.. இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக அவதானித்தால், 'எந்தளவுக்கு சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைப்பது?' என்பது தொடர்பில் ஒரு சரியான நிலைப்பாட்டிற்கு நாம் வரலாம்.

#)சுனாமிக்குப் பின்னரான உலக நிவாரண உதவிக்கான நிபந்தனை என்ற பெயரில் சந்திரிகா அரசு ஜே.வீ.பீ. கூட்டமைப்பைக் கலைத்தமையும் அதன்பிறகு நிவாரண உதவியை முழுமையாக அனைவரும் மறந்து போனமையும் நாம் எல்லோரும் அறிந்த வெளிப்படை இரகசியமாகும்.

#) இதற்கு மேலாக, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தியாவின் நலனைப் பாதிக்கும் விதத்திலான எந்தத் தீர்மானத்திற்கும் வருவதில்லை என்பதுவும் கடந்த பல வருடங்களில் அவ் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசுக்கு உச்ச கட்ட அழுத்தத்தைப் பிரயோகிக்கும் விதத்தில் அமையவில்லை என்பதனையும் நாம் அறிவோம்.

இன்று  இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்குப் பின்னால் உள்ள பிரதான நோக்கம் இலங்கை அரசைத் தமது நலன்களுக்கு ஆதரவான ஒரு நாடாகத் தக்கவைத்துக் கொள்வது ஒன்றே. இதற்காக வீசப்பட்ட தூண்டிலில் சிக்கியுள்ள புழுக்களைப் போன்றது தான் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், அதிகாரப் பகிர்வு, சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் தொடர்பான விடயங்களும் உள்ளன. எப்போது இலங்கை அரசாங்கம் பிராந்திய சர்வசே ஆதிக்க சக்திகளின் நலனுக்குச் சாதகமாகச் செயற்படுமோ அப்போது அதற்கு எதிரான அழுத்தங்கள் காணாமல் போய்விடும்.

மாற்றமாக, சிறுபான்மைச் சமூகத்தின் மீதும் நீதி,  சுதந்திரம், பாதுகாப்பு என்பன குறித்த அக்கறையும் ஈடுபாடும் சர்வதேச சமூகம் இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கான காரணமாக நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும்.

இந்நிலையைத்த தவிர்த்து இந்த நாட்டில் இனிவரும் பரம்பரைகளாவது ஒற்றுமையாக வாழவேண்டும் எனின், குறுங்கால இழப்புக்களைச் சகித்துப் பன்மைத்துவ சமூக ஒழுங்கை நோக்கிப் பயணிப்பது ஒன்றே வழியாகத் தோன்றுகின்றது.

Read 67510 times Last modified on Friday, 18 October 2013 10:34
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization