Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

தேசிய முக்கியத்துவமிக்க விவகாரங்களில் முஸ்லிம் அரசியல் Featured

(0 votes)
Photo: BBC Sinhala
26 July
2014
Written by:
Photo: BBC Sinhala

 Fauzer Mahroof

எங்கே ? முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரையும் காணோம்....

மகிந்தவின் நிறைவேற்று அதிகாரத்தில் 

மும்மாரி பொழிந்து... நாடும் குடி மக்களும்

சகல சௌபாக்கியமும் பெற்று வாழ்கிறார்கள் என 

இந்த நேரத்தில் அரசவையில் (அமைச்சரவையில்)

சிரம் பணிந்து அமர்ந்து சாமரம் வீசிக் கொண்டிருப்பார்களோ....

 Rauf Hazeer

Fauzer Mahroof அஷ்ரப் சேருடன் இருந்த உங்களுக்குத் தெரியும் " நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி " சம்பந்தமாக அவரின் பார்வை எப்படி இருந்த தென்பது . இந்த கலந்துரையாடல் அதனை முற்றாக ( ? ) அகற்றுவது சம்பந்தமாக எதிர்க்கட்சிகளால் ஒழுங்கு செய்யப்பட்டது .இந்த இரண்டு காரணங்கள் காரணமாக மு.கா இதில் பங்குபற்றாது வெளியில் இருந்து நிலைமையை அவதானித்திருக்கும் என்று நினைக்கிறேன் .அதிகாரங்க்களைகுறைப்பதில் மு.கா விற்கு இணங்க முடியும் , ஆனால் முழுமையாக அகற்றுவதென்பது சிறு பான்மை இனங்களுக்கு நல்லதா என்பதை , பெருந்தலைவருடன் இருந்த நீங்கள் இங்கு விபரித்தால் நல்லது .

 Ummu Hana

அஷ்ரபின் இறுதிக்கட்ட சவால்களும் அதனைத் தொடர்ந்து அரசியல் களத்தில் இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள, இந்த நாட்டில் குடிமக்களுக்கு பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பொருளாதார ஸ்தரப்பாட்டையும் ஏற்படுத்துவதில் நிறைவேற்று அதிகார ஜநாதாபதி முறைமை அனுகூலமாகவே இருந்து வருகின்றது என்பதனைப் பெரும்பான்மையான மக்களும் உணர்கின்றனர். இதில் இன்னும் மு.கா. அஷ்ரபின் சிந்தனையில் இருப்பதாகக் குறிப்பிடுவது இன்றைய அரசியல் நிலைமைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு நிலைமையை வெளிக்காட்டுகிறது.

இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் இதர குற்றச்செயல்கள் குறித்த குற்றச்சாட்டுக்களைக் காட்டி இந்த அரசாங்கம் தனது வீட்டு காவல் நாயை விடவும் தரக்குறைவான ஒரு இடத்தில் இவர்களை அமர்த்தி பந்தாடி வருவதனை இவர்களால் மக்கள் முன் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்.

இவர்களது நிலையை எதிர்க்கட்சிகள் நன்குணர்ந்துள்ளமையால் இவர்கள் குறித்த அனுதாப்பப் படுவதனை விட வேறு என்னதான் அவர்களாலும் செய்ய முடியும்.

இந்நிலை மாறவேண்டும் எனில் கட்சிகளில் ஜனநாயகபூர்வ ஒழுங்கும் சுழற்சி முறையில் பதவிகள் புதிய பரம்பரைக்கு மாறும் விதத்தில் பதவிக்காலம் வரையறுக்கப்பட்டஒழுங்கும் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

அவ்வாறு இல்லாதபோது எல்லிநகையாடல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சேர் சேர் என்று துதிபாடியவண்ணம் தொடர்ந்தும் இருக்கவெண்டியதுதான். 

ஏனைய எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அரசாங்கத்தை மாற்றியமைத்தாலும் அப்போது வரும் புதிய அரசாங்கத்தின் முன்னால் மண்டியிட்டு இருப்பது தவிற மு.கா. உட்பட முஸ்லிம் அரசியல் வாதிகளின் அநேகமானோரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.

 Fauzer Mahroof

சகோ ஹசீர், நான் குறித்துரைக்க விரும்பியது... நாட்டின் முக்கியமான எந்த அரசியல் முன்னெடுப்புகளிலும், உரையாடல்களிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இல்லை என்பதைத்தான்.

இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் ஜன நாயக அடிப்படையை உருவாக்குவதுதான் முக்கியமானது. இந்த சந்திப்பு வெறுமனே நிறவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான சந்திப்பு மட்டுமல்ல, அப்படி குறுக்கிப் பார்க்கவும் தேவையில்லை. இரண்டாவது எல்லாக் காலங்களுக்கும் ஒரு நிலைப்பாடு பொருந்தும் என்பதல்ல, அன்று மறைந்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் நிறைவேற்று அதிகார முறைமை சாதகமாக இருந்திருக்கலாம். மறைந்த தலைவர் அஷ்ரபுக்கு முன்பே இதனை பாவித்தவர் மலையக அரசியல் தலைவர் தொண்டமான் ஆகும். தமிழ் அரசியல் தலைமைகள் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியில் இருந்ததால் அவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை என்பதுடன், இதில் அரசியல் விவாதங்களும் தமிழ்த் தரப்பில் இருந்து வந்திருக்கின்றன.

இன்றைய நிலையில் இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரை இந்த நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையால் உள்ள அரசியல் நன் மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பதனை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அன்று தமது மக்கள் வழங்கிய கட்சிப்பலத்தால் சில சமூக அபிவிருத்திகளையாவது அவரால் முன்னெடுக்க முடிந்தது. மகிந்தவின் வருகையின் பின் மாறாக /நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி / பாசிசத்தால் அதிக பாதிப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் நிகழ்கிறது. ஜன நாயக, அடிப்படை உரிமைக்கான வெளிகள் அடைக்கப்படுகிறது. சர்வதிகாரம் தலையெடுக்கிறது.. இவற்றுக்கெதிரான அரசியல் கூட்டு

முன்னணி அவசியம். இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எங்கே

என்பதுதான் எனது கேள்வியாகும். இந்த விடயங்களில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் கட்சிகளின் நிலை என்ன? இடம் என்ன????

 

 

Read 6527 times Last modified on Saturday, 26 July 2014 21:05
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization