Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

மஹா சங்கரத்னயும் ஜம்இய்யதுல் உலமாவும்

(0 votes)
Courtesy: samakaalam.blogspot.com/
14 August
2014
Written by:
Courtesy: samakaalam.blogspot.com/

 Newton Isaac

ஞான சேரரின் செயற்பாடுகள் குறித்து 15 அமைச்சர்கள் நாளை சங்கைக்குரிய மகா நாயக்க தேரர் அவர்களைச் சந்தித்து முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒரு செய்தித் துணுக்கு இன்று பின்னந்திப் பொழுதில் கிடைத்தது.

நிவைவேற்று அதிகாரம், சட்டவாக்கல் உச்ச அமைப்பு, சட்ட அமுலாக்கல் இயந்திரம் இப்படி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு மகா நாயக்க தேரரிடம் போய் ஒரு மத குருவைப் பற்றி முறையீடு செய்யப் போவதாகக் கிடைத்த தகவல் உண்மையிலேயே வேதனையளிக்கிறது. 

அப்படியானால் இந்த மத குருக்கள் இந்த நாட்டு சட்த்துக்குக்கு அப்பாற் பட்டவர்களா? அவர்களைத் தட்டிற் கேற்க மத உச்ச நிறுவனத்துக்கு மட்டும்தானா அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வியும் பிறக்கிறது. போகின்ற போக்கப் பார்த்தால் இந்த நாடு கொண்டுள்ள நிறை‌வேற்று அதிகாரம், சட்டவாக்க உச்ச அமைப்பு என்பவற்றக்கு மேலாக ஈராணிய Supreme Leader பாணியை இந்த நாடு விரைவிலேயே தழுவிக் கொள்ளுமா என்ற சந்தேகமும் எமக்குப் பிறக்கிறது. 

நாட்டு சட்டத்தை துச்சமாகக் கருதும் மத குருக்களைத் தண்டிக்க முடியாத படி எது ஆட்சியாளர்களைத் தடை செய்கிறது? அவர்கள் யாருக்காக அஞ்சுகிறார்கள் என்றெல்லாம் கேட்கத் தேர்ணறுகிறது. சரி சங்கைக்குரிய மகா நாயக்க தேரர் அவர்கள் முறன்டு பிடிக்கும் ‌மதகுருவுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ? கத்தோலிக்கப் பாணியிலான Excommunication முறைகள்கள் ஏதாவது பௌத்தத்திலும் உண்டா? 

சரிதான். அந்த முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட சங்கைக்குரிய மகா நாயக்க தேரர் அவர்கள் பிரச்சினைக்குரிய மத குருவை அழைத்து எச்சரித்தால், அல்லது புத்திமதி சொன்னால் அதை அவர் ஏற்று உடனேயே மனம் திருந்தி கௌத்தம புத்தரின் நிலைக்குத் திரும்பி விடுவாரா? அவரையும் இந்த மத குருக்கள் புறக்கணித்தால் அதன் பிறகு அந்த சங்கைக் குரியவரின் நிலை என்னாகும்?

இப்படிக் கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டு போகலாம். முஸ்லிம்களின் பிரச்சினைக்கு யார் பதில் தருவது. 

சமூகக் கவலையுள்ளவர்களாக நடிப்பவர்களே அந்தக் கவலைகளை Nomination னோடு மறந்து போனார்கள். அடுத்து வருதற்காக காத்திருப்போம். முடிவுகள் இனிதாயும் வரலாம், கசப்பாயும் வரலாம். வருவதை ஏற்றுக் கொள்வதைவிட வேறு வழி...?

 

 Ummu Hana

இந்த நாட்டில் முஸ்லிம் மற்றும் பௌத்த மதகுருக்களின் நிலைமையில் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம்.

இவ்விரு சமூக மதகுருமாறும் தமது கற்கைகளைப் பாரம்பரிய கற்றல் ஒழுங்குடன் நிறுத்திக் கொண்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

விளைவாக பௌத்த மதகுருக்களால் பௌத்த சிந்தனையை இன்றைய சமூகத்தில் நடைமுறைப் படுத்துவதற்கான பொருத்தமான ஒழுங்குகளுக்கு வரமுடியவில்லை. இவர்களால் சமூகத்தில் இருப்பு நிலைக்கும் இவர்கள் எதிர்பார்க்கும் பௌத்த விழுமியங்களும் இஸ்லாமிய விழுமியங்களும் வாழும் சமூகமாக இலங்கை சமூகத்தைக் கட்டமைப்பதற்கான வாழ்வின் அனைத்துத் துறைகளிலுமான பங்களிப்பு செய்வதற்கான தகைமையும் சிறப்புத்தேர்ச்சியும் பெறமுடியவில்லை என்பது கசப்பான ஆனால் மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள ஒரு சில உதாரணங்கள் இதோ

உதாரணம் 01

பி.பி.எஸ் உள்ளிட்ட இதர தீவிரப்போக்குடைய பௌத்த அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத மகா சங்கம், முஸ்லிம்களிடையே காணப்படும் இறைநம்பிக்கை சார் பிரிவுகளிடையே எந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாத முஸ்லிம் மத தலைமை ,

உதாரணம் 02

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டமை குறித்து சந்தோசப்படும் பௌத்த மஹாசங்கரத்னயும் இலங்கை ஜமிய்யதுல் உலமாவும், யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மையையும் நீதியையும் வாழ வைப்பதற்காக பௌத்தத்தின் பெயரால் அல்லது இஸ்லாத்தின் பெயரால் குறைந்த பட்சம் ஒரு கண்டத்தையாவது தெரிவிக்காமை

உதாரணம் 03

யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சுமார் 30 வருட காலத்தில் இவ்விருமத தரப்பினராலும் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களை இனங்காணவோ அதனை நிவர்த்திப்பதற்கான எத்தகை செய்ற்பாட்டுவாதத்தையும் முன்வைக்கவோ அதற்காக அவசியமான அழுத்தங்களை ஏற்படுத்தவோ முடியாது போனமை 

உதாரணம் 04 

இலங்கையில் தனித்துவ இஸ்லாமிய சிந்தனை என்ற பெயரில் அறிவு பாதுகாப்பு கொடுக்கல் வாங்கல்கள் சமூகத்தை வளப்படுத்தல் என அனைத்தையும் பிறசமூகங்களில் இருந்து தனித்தே சிந்திக்கவும் தூண்டியமை நாம் அறிந்த விடயமே. இஸ்லாம் குறிப்பிடும் சகவாழ்லை முஸ்லிம் சமூகத்தினுள் நடைமுறைப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒத்ததாகவே இன்றைய இலங்கை பௌத்த சமூகத்தினதும் நிலையாகும்.

உதாரணம் 05

இன்றைய சமூகத்தில் நிலவும் நிறுவனமயப்பட்ட அநீதிகளைக்களைவதற்கும் பன்மைத்துவ சமூகஒழுங்கைக் கட்டியெழுப்புவதற்கும் ஏற்ற நடைமுறை ஒழுங்குகள் மற்றும் புத்தாக்க சிந்தனைகளைக் முன்வைப்பதற்கான தகுதியற்ற கையறுநிலை 

இந்நிலைமை மாறவேண்டும் எனில் சகவாழ்வு குறித்த எமது சிந்தனை, இலங்கைவாழ் அனைத்து சமூகத்தினதும் சமூகநலன் குறித்த விவகாரங்களில் பங்களிப்புச் செய்யும் விதத்தில்  கட்டமைத்து அனைவருக்கும் விடிவுகாண உழைப்பதில் மாத்திரமே தங்கியுள்ளது.

Read 4270 times Last modified on Thursday, 14 August 2014 17:10
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization