புர்ஹான் மௌலவியின் வாக்குறுதி மீறாமை?யும் குவைட் வைத்தியசாலை அமாணிதம்?? பேணலும் - ஒரே முகம் இரு பார்வை Featured

(0 votes)
புர்ஹான் மௌலவியின் வாக்குறுதி மீறாமை?யும் குவைட் வைத்தியசாலை அமாணிதம்?? பேணலும் - ஒரே முகம் இரு பார்வை
18 September
2014
Written by:

Written By Newton Isaac

எனது நண்பர் ஒருவரிடமிருந்து எனது மின்னஞ்சற் பெட்டிக்குள் கிடந்த அந்த செய்தியைப் படித்தபோது உச்சந் தலையிலிருந்து நாளங்களின் ஊடாக உள்ளங்கால் வரையில் ஒடிய மின்சாரத் தாக்கம் உண்மையிலேயே என்னை உலக்கி விட்டது.

மூன்று வருடங்களுக்கும் குறைவான ஒரு காலப் பகுதியில்தான் புர்ஹான் மௌலவியுடன் பழக்கம்..............நானா என்று அழைப்பார். கொஞ்சம் கடுகடுப்பான மனிதர். எப்போதும் சீரியஸாக இருப்பார். சிறைக் கூடங்களுக்குப் பின்னல் தள்ளி விடப்படும்ம் அளவுக்கு.... ........ சரி பிழை பற்றிப் பேசவில்லை. இறைத் தூதர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து இஸ்லாத்தை தொட்டுத் தொடரந்து கொண்டு செல்லம் பரம்ப‌ரைக்கு என்ன நேர்ந்து விட்டது?

ஆலிம்களும் செய்கிறார்கள் தஃவாப் பணியை, அமைப்புக்களும்தான் செய்கின்றன அவற்றை. ஆனால் இப்போதெல்லாம் நம்மைச் சூழ நடந்து கொண்டிருப்பவற்றையிட்டு அவர்களின் காத்திரமான கருத்துக்கள் எதையும் வரக்காணாத நிலையில், சில பல போது அவர்களே அவற்றின் நேரடி பங்குதாராக இருப்பது பற்றி பகிரங்கமாக ஒரு கடிதம் எழுத வேண்டும். ஆகவே உங்களுக்குத் தெரிந்த இஸ்லாமிய கல்விமான்கள் சிலரது பெயர்க‌ளைத் தாருங்களேன் என்று கேட்டபோது சமூக மாற்றம் பற்றி சதாவும் பேசிக்கொண்டிருக்கும் சமூக சிந்தனையார் எனக்கு ”உங்கள் முயற்சி பலனற்றது. நீங்கள் எதிர் பார்ப்பவற்றை நிச்சயமாக நீங்கள் அடைந்து கொள்ள மாட்டீர்கள்" என்று அவர் இப்படிக் குறிப்பிட்டார்.

“………And we produce poverty oriented students around 3000 every year from our madrasas alone; then from schools too. With all this we have to have this kind of people who are heading underworld, drug deals, corruption and cheating. Now to whom we are going to blame? We say upbringing with poverty in madrasa as bless from Allah instead Allah says it's a crime……?

”people who are heading underworld, drug deals, corruption and cheating.” என்ற வரிகளை சில முறைகள் மீட்டிப் பார்தேன், ‌முதற் கை அனுபங்கள், நண்பரகள் என்னுடன் பகிரந்து கொண்ட இரண்டாம் கை அனுபங்களை உரசிப் பார்த்தேன், மூன்றாம் நிலை அனுபங்கள் கூட சில பல கிடைக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது நான் குறிப்பிட்ட சமூக சிந்தனையாளரின் கருத்துக்கு அவைகள் மிக நெருக்கமாக வருகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக இது சமூகத்தின் கவனத்தை ஈக்க வில்லை என்பது வேதனைக்குரியது.

  • ஒரு மாகாண சபை உறப்பினரை கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் சந்தித்போது கொஞ்சம் களைப்படைந்திருந்தார். பொலிஸ் நிலையத்தில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். அவசரமாக தொலைபேசி அழைப்பு வந்ததாம் பொலிஸ் நி‌லையத்துக்கு வருமாறு. அங்கு போனால் ” பாருங்களேன் இந்த அறிவு கெட்டவர்கள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் புலிகள் பாணியில் வடங்கிலிருந்து ஒரு தமிழரைக் துணிந்து கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள் இந்த இரண்டுபேருமே மௌலவிகள்…………..” ”ம்.....ஹம்......என்று பெரு மூச்சு விடுவதைத் தவிர எம்மால் செய்வதற்கு என்ன இருக்கிறது?
  • எனக்குத் தெரிந்த ஒருவர், கணினி வடிவமைப்பு நிலையம் ஒன்றை நடாத்துகிறார். அவரது நிலையத்தில் ஒரு மெலவியையும், இன்னுமொரு மத்ரஸா மாணவனையும் அடிக்கடி காணக் கிடைக்கும். இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று அந்த தெரிந்தவரிடன் கேட்டேன். சொஞ்சம் அசௌகரியமாகச் சிரித்துவிட்டு ”ஊர் உலகத்தில் இல்லாத பெயர்களின் லெட்டர் ஹெடிங்கள் அடிப்பார்கள்” நாம் என்ன செய்வது? அடித்துக் கொடுத்துவிட்டு காசை வாங்க வேண்டியதுதான்” என்றார். 

பின்னர ஒரு நாள் அந்த தெரிந்தவர் எனக்கு டெலி‌போன் செய்து ” அந்த அசாமிக்கு ஒரு கடிதம் ஒன்று தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் வீட்டுக்கு அனப்பினால் ஏதாவது நினைப்பீர்களா ? என்று கேட்டார். பரவாயில்லை அனுப்புங்கள் என்று சொன்னேன். சுமார் அரை மணி நேரத்துக்குப் பின்னர் வீட்டு மணி அடித்தது. முன் வாசலைத் திறந்தால் அதே அலிம், அதே சீடன். நின்று கொண்டிருக்கிறாரகள். “இதையெல்லாம் வெளியே போய் செய்து கொள்ள முடியாது . அதுதான் உங்கள் நண்பர் என்னை உங்களிடம் அனப்பினார்” என்றார். நீங்கள் கையால் எழதித் தந்தால் போதும் . மற்றயதை நான் அங்கு போய் செய்து கொள்வேன் என்றார். 

சிரிப்பதா அழுவதா என்னு தெரியவில்லை. உலக்கத்திலே எங்கேயும் பதிவு செய்யப்படாத ஒரு இஸ்லாமிய சமூக அபை்பின் கடிதத் தலைப்பு அது. அதன் தலைவரம், செயலாளரும் மான்பு மிகு ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழதுகிறாரகள். அந்தக் கடிதம் இப்படித்தான் தொடங்கியது.

மௌலானா, மௌலவி............................... அவரக்ள கடந்த பொதுத் தேர்தலின் போது சுமதர் 500 ஆலிமகளைத் திடக்கொண்டு தங்கள் கட்சியின் வெற்றிக்காகப் பாடுபட்டவர். எனவே அவரை ……………….. பிரதேசத்துக்கான முஸ்லிம் விவகார ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்க வேண்டும்”

இதுதான் வேண்டுகோள். அந்தக் கடிதத்தில் கையொப்பமிடும் தலைவரும் செயலாளரும் இதே ஆலிமும், அவரது இதே சீடரும்தான்.

  • உதாரணங்களைத் தேடி நாம் எங்கெங்கோ அலைவானேன். நாம் வாய் நோகாது குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் பெருமைக்குரிய புத்தளத்து குவைத் வைத்திய சாலையை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த வைத்தியசாலையின் தாபகத் தந்தையர் மூவர். அதில் ஒருவர் நழீமிய்யா JUMP OUT, அடுத்தவர் ஒரு மத்ரஸா Product. மூன்றாம் நபரபை் பற்றிய கேள்வி இங்கு எழவில்லை என்பதால் விட்டு விடுகிறோம்.

நான் மேலே குறிப்பிட்ட சமூக சிந்தனையாரின் கணிப்பீட்டின் படி 10 வீத சனத்தொ‌கையக் கொண்ட இந்த சமூகத்தின் அரபுக் கல்லூரிகள் என அழைக்கப்படும் மத்ரஸாக்களில் தலை வாசலைத் தாண்டி வெளி உலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை 3000 ஆயிரம் . அவர்களில் பலர் குற்றச் செயல்களைத் நோக்கி நடக்கிறார்கள் என்றார்.

வேடிக்கை என்னவெனில் இந்த நாட்‌‌டிலே பல்கலைக் கழகங்கள் சிலவும், தனியார் பட்டப்ப படிப்பு நிறுவனங்கள் சிலவும், இலங்கை சட்டக் கல்லூரியும் சேர்ந்து தேசிய ரீதியில் சட்டத் துறை சார்ந்தோராக வெளியேற்றும் தயாரிப்புக்களின் எண்ணிக்கை ஒரு வருடத்துக்கு 1000 என்று எப்போதோ எங்கோ வாசித்த நினைவு. இந்த நிலையில் சட்டக் கல்லூரி தனது தயாரிப்பு எண்ணிக்கையை அதிகரித்துத்தான் ஆக வேண்டும் போலும்.

Read 790 times Last modified on Friday, 16 June 2017 16:46
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization