ஜமா-அத்-ஏ- இஸ்லாமி அபை்பின் முன்னாள் தலைவர் மௌலவி இப்ராகீம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். Featured

(0 votes)
ஜமா-அத்-ஏ- இஸ்லாமி அபை்பின் முன்னாள் தலைவர் மௌலவி இப்ராகீம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
24 September
2014
Written by:

கௌரவத்துக்குரிய ஜமா-அத்-ஏ- இஸ்லாமி அபை்பின் முன்னாள் தலைவர் மௌலவி இப்ராகீம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

ஸகாத் நிதி மூலம் புத்தளத்தில் கட்டப்பட்ட,பல மில்லியன்ரூபாக்கள் பெறுமதியான, குவைத் வைத்தியசாலை தொடர்பாக புத்தளம் மக்களின் உள்ளங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலை தங்களின் அன்பான கவனத்தை ஈர்த்திருக்கும் என்பது எமது பலமான நம்பிக்கையாகும்.

புத்தளத்தில் குவைத் வைத்தியசாலை என்ற ஒன்று அமைக்கப்பட்ட நாளிலிருந்து நானும், என்னைச் சேர்ந்தவர்களும் அது குவைத் ஸாகாத் இல்லத்தால் வழங்கப்பட்ட ஸாகாத் நிதியைப் பயன்படுத்தி நிறுவப்பட்டது என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் பரிதாபத்துக்குரிய சீரழிவு, அதன் பின்னால் உள்ள மர்மக் கதைகள் எல்லாம் வெளிவரத் தொடங்கிய நிலையில் சில நியாயமான கோரிக்கைகளை வைத்து உங்களைப் பிரதியீடு செய்துள்ள அந்த அமைப்பின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் மணு ஒன்றைச் முன்வைத்தோம் . ஆனால் உங்களைப் போன்றவர்களால் நிறுவப்பட்ட பெருமைக்குரிய நிறுவனத்தின் பொறுப்புள்ள தலைவராக இருக்க வேண்டிய அந்த அமைப்பின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இது தொடர்பில் தொடர்ந்தும்பாரா முகமாகவே இருந்து வருகின்றார்.

நமது சமூகம் மிகப் பயங்கரமான சூழ் நிலையை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் இஸ்லாமிய இயக்கங்களின் நிதிமற்றும் செயற்பாடுகள் தொடர்பில்,BBS போன்ற தீவிரவாத அமைப்புக்களால் கழுகுக் கண்கொண்டு நோட்டமிடப்பட்டு வரும்நிலையில் இது போன்ற பொறுப்பற்ற நடைமுறைகள் தொடர்ந்தும்எமக்குப் பாதகமாகவே அமையும் என்பதனை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வர விரும்பகிறேன்.

இது குறித்து உங்களது கவனத்திற்கு கொண்டு வரு வதற்கு நீங்கள் இஸ்லாமிய இயக்கத்தின் முன்னாள் தலைவர் என்பதற்கப்பால் நாட்டு நிலைமைகள் குறித்து விவேகமாக சிந்திக்கக்கூடியவர் மூத்தபல்கலைக்கழக விரிவுரையாளர்ச மூகத்தில் அன்றுபோல் இன்றும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகளின் இயக்க கட்சிபேதமின்றி ஈடுபாடு காட்டிவருபவர் ,Hisbul Islam Trust, Serandip Research and Development Trust ஆகிய அமைப்புக்களின் தாபகத் தந்தை போன்ற உங்களது முதிர்ச்சியும் துணைக் காரணங்களாகும்.

ஸகாத் பணத்தின் அமாநிதம் குறித்தும் அதன்பாரம் குறித்தும் அது முஸ்லிம் சமூகத்தில் ஜம்பெரும் கடமைகளுள் ஒன்றாகவும் அதற்காக எமதுமுதல்கலீஃபா போரிடத் தயாரானமை போன்றனவும் புத்தளம்மக்களுக் கென்றகட்டப்பட்ட குவைத் வைத்தியசாலையில் மில்லியன்கள் பெறு மதியான மருத்துவ உகரணங்கள் பயன்படுத்ப்படாமல் அழிந்து போகையில் புத்தளம் மக்கள் அதனால் பயன்பெரறு வதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ஓரளவுக்கவது நிவர்த்திக்கலாம் என்ற புத்தளத்துமக்களின் மனக்கொந்தளிப்பை நீங்கள் நன்றாக வே புரிந்து கொள்வீர்கள் என்பதுஎமதுமிக உறுதியான நம்பிக்கை.

துரதிஸ்டவசமாக ஜமா-அத்-ஏ இஸ்லாயின் அங்கங்கள் நாம் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்‌போது குவைத் வைத்தியசாலை எமது சொத்து, அது பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும், அல்லாஹ்வுக்கும் பதில் சொன்னால் போதும். சமூகத்துக்குப் பதில் சொல்லல், வெளிப்படையாயிருத்தல் என்பவற்றில தாம் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்ற தொனியில் பேசி வருகின்றனர்.

கௌரவ ஆலிம் அவர்களே! ‌அந்த வைத்தியசாலையின் சேவைக்காக பயிற்றப்பட்ட தாதி உத்தியோகத்தர்கள உள்ளிட்ட அனைவரும் பதவி நீக்கப்பட்டு ள்ளதோடு அவர்கள் தனியார் மருத்துவ மனைகளிலும், தனியார் மருந்தகங்களிலும் இன்றுவேலை செய்கிறார்கள்!

இப்போது அங்கு எதுவும் இல்லை. சுற்றாடலில் உள்ள வறிய மக்களுக்கு ரூபா 50.00க்கு ஒரு பகுதி நேர வைத்தியர் மூலமாக மருந்து கொடுக்கப்படுகிறது. மிக வேதனை என்னவெனில் மில்லியன் கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட பெருமைக்குரிய வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக (அரச வைத்தியசாலை ஒன்றின் Director or Medical Superintend) தமிழ் மொழிக்கு அப்பால் எதுவும் அறியாத ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இருக்கிறார்.

பின்வரும் தகவகல்களை கோடிட்டுக் காட்ட விரும்புகிறோம். 

* அங்குள்ள பெறுமதியான பொருட்கள் பட்டியற்படுத்தப்படவில்லை அல்லது வருடாந்த பொருட் கணக்கொடுப்புக்கு (Annual Board of Survey) உடபடுத்தப்படுவதில்லை. ஏற்கனவே அங்கிருந்து பல பெறுமதியான பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. அதி நவீன் கருவிகளின் கேபள்கள் அகற்றப்பட்டுள்ளன. அந்தப் பொருட்களை பெறுமதியற்ற இருப்புக் குவியல்களாக்குவது இதன் நோக்கமாகும்.

* மிக பெறுமதியான அதன் உபகரணங்கள், கட்டில்கள், இதர தளபாடங்களுக்கு மேலதிகமாக ஒரு அறையில் ஊனமுற்றோர் பாவிக்கும் Crutches கட்டுக் கட்டாக கிடக்கின்றன.

* புத்தம் புதிய இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் அவசரத் தேவைக்காக குறைந்த கட்டண வாடகைக்குக் கொடுக்கப்படுவதாக ஒருவர் பதில் எழுதியிருந்தார். இரவு நேரங்களில் ஒரு காவலாளியின் பொறுப்பில் இருக்கும் அந்த வைத்தியசாலையில் அவரசத் ‌தேவைக்காக அம்பியுலன்ஸ் வண்டியை அனுப்புவது எப்படி என எமக்குப் புரியவில்லை.

* கண் சிகிச்சை முகாம்கள் நடாத்துவதாக சொல்லப்படுகிறது. ஆயினும் அது ஜம்இய்யத்துல் ஸபாப் உட்பட இன்னும் சில சிறுவனங்களில் கண் சிகிச்சை முகாமை நடாத்துவதற்காக அங்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறதே அன்றி அந்த சிகிச்சை முகாம்கள் அவர்களுடைய ஏற்பாடல்ல. ஆயினும் அவ்வப்போது பெனர்களைக் கொழுவி புகைப்படங்களை மாத்திரம் எடுத்துக் கொள்கிறார்கள். 

* ஒரு தனி நபரின் காணி அந்த வைத்தியசாலை வளவுக்குள் உள்ளது. அதற்கு இன்னும் பணம் கொடுக்கப்படவில்லை. அவர் அண்மையில் காலமானார். அவரது இரத்த உறவுகளுக்கு நட்டஈடு கொடுக்கப்படவில்லை அல்லது காணியும் கொடுக்கப்படவில்லை. அது இன்னும் ஒரு அநந்தரச் சொத்தாக குறிப்பிட்ட வைத்தியசாலைக்குள் இருகிறது.

தங்களிடம் முன்வைக்க எம்மிடம் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவைற்றதை் தங்களிடம் திணிப்பதைப் பார்க்கிலும் நேரடியாக எமது வேண்டுகோளுக்கு வரலாம் என நினைக்கிறேன். 

எமது வேண்டுகோள்.

1) புத்தளம் குவைத் வைத்தியசாலை குவைத் ஸகாத் நிதியத்திலிருந்தோ அல்லது வேறு அமைப்புகளில் இருந்தோ புத்தளம் மக்களின் நலனுக்காக வழங்கப்பட்ட நிதியில் இருந்து வழங்கப்படாத ஒன்றா?

2) அதற்கு அவர்கள் புத்தளம் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கவில்லையா?

3) அங்குள்ள பாவிக்கடாத பொருட்களை எல்லா சமுகத்தாரினதும் நலனுக்காக புத்தளம் ஆதார வைத்திய சாலைக்கும், புத்தளம் நகரத்தை அண்டியுள்ள ஏனைய கிராம வைத்தயக் கூறுகளுக்கும் கொடுப்பதில் தடையேதும் உண்டா?

இந்தக் கேள்விகளுக்க பதிலுரைக்கும் பொறுப்பை உணரந்து செயற்படுவீர்கள் என உறுதியாக நம்புகிறோம். தயவு செய்து குவைத் வைத்தியசாலைக்குப் பின்னால்உள்ள மர்மத்தை புத்தளம் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் செயற்பாடுகளைப் பொருந்திக்கொள்வானாக.

Read 682 times Last modified on Friday, 16 June 2017 16:45
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization