குவைத் வைத்தியசாலை தொடர்பில் களமிறங்குகிறார் இஷாம் மரிக்கார் Featured

(0 votes)
குவைத் வைத்தியசாலை தொடர்பில் களமிறங்குகிறார் இஷாம் மரிக்கார்
02 October
2014
Written by:

குவைத் வைத்தியசாலை: வெறுமனே பேசும் பொருளாக இருக்க காரணம் என்ன, வாருங்கள் பேசுவோம்; இஷாம் மரிக்கார் 

புத்தளம் குவைத் வைத்தியசாலை சுமார் ஒரு சில மாதங்களாக புத்தளத்தில் சமுக ஆரவலர்கள் மத்தியில் ஒரு பேசும் பொருளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்தவிடயங்கள் பேசும் பொருள் வெறுமனே பேசும் பொருளாக இருக்க காரணம் என்ன என்பதை கொஞ்சம் touch அடித்து பார்த்தால் பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்:

1. இந்த குவைத் வைத்தியசாலை விடயம் ஜாமதே இஸ்லாமிக்கு எதிரான நபர்களால் பேசப்படுகிறது ஆகவே இது ஒரு பொது பிரச்சினை அல்ல இது ஜமாத்தே இஸ்லாமுக்கும், அந்த இயக்கத்தை விமர்சிக்கும் நபர்களுக்கும் இடைப்பட்டது என்ற ஒரு பார்வை

2. இந்த குவைத் வைத்தியசாலை பல வகையில் புத்தள மக்களுக்கு உதவுகின்றது என்பதனை வெறும் கண் சத்திர சிகிச்ச மூலம் அவர்கள் அறிந்திருப்பதால் அல்லது அப்படி காட்டப்பட்டிருப்பதால்

3. நகர பிதா பாயிஸ் அவர்கள் இந்த குவைத் வைத்தியசாலை விடயத்தை அவருடைய அரசியல் பலிவாங்களுக்காக ஏவி விட்டிருக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் பேசும் சந்திப் பேச்சு பரவுவதால்

4. இந்த விடயங்களை சமுக ஊடகங்களிலே போலிக் கணக்குகளை பாவித்து பேசுகிறார்கள், ஆகவே இது உண்மைக்கு புறம்பானவை என்று கொள்ளும் ஊகம்

5. குவைத் வைத்தியசாலை ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்ற நோக்கம் அறியாமல் அது தனியார் சொத்து போல் மக்கள் மனதிலே பதிந்திருப்பது

6. குவைத் வைத்தியசாலை என்ற ஒன்று புத்தளத்திலே இருக்கிறதா என்பது கூட சிலருக்கு தெரியாது

7. அந்த தவறை செய்பவர்கள் சமுகத்தில் மதிக்கப்படக் கூடிய அந்தஸ்தில் இருப்பவர்கள், ஆகவே அந்த நபர்களை நாம் எப்படி சரியானதை செய்யும் படி சொல்வது?

8. நாம் அவர்கள் செய்த தவறை சொல்வதால் எமக்கு இருக்கும் சமுக அந்தஸ்து குறைந்துவிடுமோ? என்ற பயம்

9. நான் சார்ந்து இருக்கும் இயக்கத்தை நான் எப்படி கேள்வி கேட்பது? என்ற கேள்வி.

10. கேள்வி கேட்பவர்கள் சமுகத்தில் விமர்சிக்கபடக்கூடியவர்கள் ஆகவே நானும் கேள்வி கேட்டால் அவர்களை போல் என்னையும் அந்த பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள் என்ற பயம்

இப்படிப்பட்ட காரணங்களை அடுக்கி வைத்துக்கொண்டே போகலாம் ஆனால் இதனை காரணமாக வைத்து பலர் இந்த பிரச்சினையை தள்ளிவைக்கிரார்கள், ஆனால் சமுக ஆரவலர்கள் என்றும் படித்தவர்கள் என்றும் கூறிக்கொண்டு திரியும் பலர் இதன் பின் இருக்கும் உண்மையை அறிந்திருந்தும் நமக்கு ஏன் வீண் வம்பு என மனதுக்குள்ளே பேசிக்கொண்டு சில நேரம் அதனை வெளியிலேயே வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

சமூகத்துக்காக KUWAIT HOSPITAL FOUNDATION TRUST என்ற ஒரு நிதியத்தால் கட்டப்பட்ட இந்த வைத்தியசாலை ஏன் தான் எதற்காக கட்டப்பட்டது என்ற நோக்கத்தை மறந்து வெறும் “நீடித்து வாழ வேண்டும்” என்ற ஒரே நோக்கத்துக்காக சும்மா நிற்கிறது என்பது தான் புரியாமல் இருக்கிறது!

எல்லா சமுக விடயங்களிலும் தாங்கள் படித்தவர்கள், தாங்கள் நிதி சேகரித்து புத்தளத்தில் பல சேவைகளை செய்பவர்கள், தாங்கள் தான் பள்ளி நிர்வாகத்தை நீதிக்காக மாற்ற துடிப்பவர்கள், தாங்கள் தான் சீர் திருத்தவாதிகள் என நூறுக்கு முன்னூறு தடவை வாய் கிழிய சொல்லும் நம்மூர் படித்தவர்கள் எங்கே போனார் இந்த அநியாயத்தை நியாயப்படுத்த.

நியாயமானோரே நியாயமானோரே என ஒவ்வொரு காலத்திலும் நீதிக்காக வாய் திறந்து பல லைக்களை படித்தவர்களிடமிருந்து வாங்கும் அந்த துடிப்புள்ள இளைஞர் நேசங்கள் எங்கே?

வருடா வருடம் பல உயிர்களை பாதுகாப்பதற்காக தனது சொந்த இரத்தங்களை கொடுத்துதவும் அல்லது மக்களின் இரத்தங்களை பெற்று பல உயிர்களை காப்பாற்ற உதவும் இளைஞர் குழுக்கள் எங்கே? கொடுக்கும் இரத்தங்களை ஏற்றும் போது தேவைப்படும் பல இயந்திரங்கள் அங்கே குவைத் வைத்தியசாலையில் தனியாக கிடந்து தவிக்கும் போது இங்கே பொது வைத்தியசாலையில் மக்கள் தரையில் படுக்க இவர்கள் என்ன செய்தார்கள்? சமுக தொண்டு இதுதானா?

தொண்டர் குழுக்கள் பல இருக்கும் இந்த புத்தளத்தில் ஏன் குவைத் வைத்தியசாலையில் மட்டும் எந்த தொண்டர் குழுக்களும் தொண்டு பணியில் ஈடுபட அனுமதி மறுக்கப்படுகிறது? ஏன்?

தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் புத்தளத்தில் போதைப் பொருள், கட்டப் பஞ்சாயத்து போன்றவை இருக்க கூடாது என்று நினைத்து அவரை அளித்து ஒலித்த நகர முதல்வர் இதில் ஏன் அமைதி காக்கிறார்? அவரின் மிதிக்கு என்ன காரணம்?

சமுகத்தில் புதிதாக முளைத்த நல்லம் நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள், துடிப்புள்ள இளைஞர் குழுக்கள்,வெளிநாட்டில் இருக்கும் அமைப்புக்கள், இஸ்லாமிய இயக்கங்கள், மகளிர் அமைப்புக்கள், ஏன் இதை பார்க்காமல் இருக்கிறன?

நகர பிதா தவறு செய்யும் போது நாங்கள் நடுநிலையானவர்கள் என்று கூறிக்கொண்டு அவரை திருந்தும் படி கட்டுரை எழுதும் ஆசிரியர்கள் எங்கே? இதற்கு உங்கள் ஆலோசனை எங்கே?

நமது தலைமை என சொல்லும் புத்தளம் பெரிய பள்ளி ஏன் மௌனம் காக்குறது? எந்த இயக்கத்துக்கும் சார்பில்லை என்று சொன்னால் ஏன் இவற்றை பற்றி விசாரிக்கக்கூடாது?

புத்தளத்தில் இணையம் இதில் என்ன பங்கு வகிக்கிறது? மிகவும் ஆளாக ஒழுங்கமைப்பக்கட்டு இயங்கும் FB குழுமங்கள் ஏன் இதில் எதுவும் செய்யாது மிதி காக்கிறது?

இந்த வைத்தியசாலை ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமியினால் அமைக்கப்பட்டது என்பதால் தான் எல்லோரும் அமைதி காக்கிறார்கள் என்றால், அது ஏன்? அவர்கள் குற்றம் செய்யாத மலக்குகளா? அல்லது சுவர்க்கத்துக்கு சொந்தக்காரகள் என வலது கையில் பட்டோலை கொடுக்கப்பட்டவர்களா?

அந்த வைத்தியசாலை கட்டப்பட்ட போது நடந்த சீர்கேடுகள் எல்லோருக்கும் தெரியும், அதனை ஒரு நல்ல நலனுக்காக மறைக்கிறோம்! ஆகவே இந்த அநியாயத்திற்கு என்னதான் தீர்வு? தீர்வை நோக்கி நகர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன? இதனை சொல்வதில் நாங்கள் விடும் தவறு என்ன? வாருங்கள் பேசுவோம்!!!

 

Read 1956 times Last modified on Tuesday, 07 October 2014 16:32
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization