குவைத் ஸகாத் இல்லம் வழங்கிய அம்பியூலன்ஸில் குர்பான் இறைச்சி பங்கீடு Featured

(0 votes)
குவைத் ஸகாத் இல்லம் வழங்கிய அம்பியூலன்ஸில் குர்பான் இறைச்சி பங்கீடு
21 October
2014
Written by:

இன்னொருவர்  வேதனை  இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற  ”ஜஇ” களுக்கு இதுவெல்லாம் ‌ வாடிக்கை”

ஒரு அரசாங்க வைத்திய சாலையின் “அம்பியுலன்ஸ” வண்டியின்  விபத்துக் கோர கோலம் இது.  இருவரின் உயிரைக் காவு கொண்டு , இன்னும் இரண்டொருவரை  வைத்திசாலையில் அதி உயர் கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பிய பரிதாபமான விபத்து.  விலை  மதிக்க முடியாத ஒரு ‌இளம் பெண் வைத்தியரை நாடு இழந்திருக்கிறது. 

இந்த வண்டி  புத்தளம் தேர்தற் தொகுதியில் உள்ள ”கொத்தாந்தீவு” கிராமிய வைத்தியக் கூறிற்கு ”யுனிசெப்” நிறுவனத்தின் அன்பழிப்பு.  புத்தளத்தின் பரம்பரைப் பிறப்புக்களுக்கும் , வடக்கு முஸ்லிம் புலப்பெயர்வுக்குப் பின்னர் புத்தளம் மண்ணில் புகலிடம் தேடிய சமுகத்தவருக்குமாக  சற்றேறத்தாழ  ஒரு இலட்சத்து அறுபத்தையாயிரம் பேருக்கான புத்தளம் ஆதார வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிக்சைக்காக நோயாளியரை தலை  நகரின் வைத்திய சாலைகளுக்கு அனுப்ப அம்பியுலன்ஸ் வண்டிகள் மேலதிகமாகத் தேவைப்படும் போதெல்லாம்  அவசரத்துக்கு ஓடி  வரக் கூடிய தூரத்தில் உள்ள அம்பியுலன்ஸ் வண்டி இது.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உள்ள 08 அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கு அப்பால் இன்னும் பல வண்டிகள் ஒவ்‌வொரு நாளும் தேவைப்படுதால்  வண்ணாத்திவில்லு, போன்ற இடங்களில் உள்ள அம்பியுலன்ஸ் வண்டிகள் இவ்வாறு எடுத்தக் கொள்ள்ப்படுவதாக புத்தளம் ஆதார வைத்தியசாலை நிருவாகம் தெரவித்தது. 

ஒரு வண்டியை அல்லது ஒரு இயந்திர சாதனத்தை இழந்துவிட்டால் அதற்கான மாற்றீட்டை பெற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய முயற் கொம்பு என்று யாருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

இந்த விபத்தில் சிக்கிய வண்டிக்கு இன்னுமொரு பேரிடியும் காத்திருந்தது.  அந்த விபத்து அதன் சாரதியின் தவறு அல்ல. ஒரு பெரிய புள்ளியின் பார வண்டி ஒன்றின் சாரதியின் தவறு.  ஆனால்  அதிகாரம் எழுதி‌யதை மாற்றி எழுத வைத்தது.  தவறை அம்பியுலன்ஸ் வண்டியின் சாரதி தலையில் போட்டு விட அதற்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஆளணியினர் தெருவுக்கு இறங்க வேண்டிய நிலை.  இந்த விடயத்தை நான் இங்கு குறிப்பிட ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.  அதை இந்த ஆக்கத்தின் பின்னால் உள்ள பகுதியில் நீங்கள் கண்டு கொள்ளலாம்.

எனவே இந்த இடத்திலிருந்து உங்கள் இஸ்லாமிய புனிதப் போர்களம் ஒன்றின் பதிவுகளுக்கு இட்டுச் செல்கிறேன். 

தமக்காக அல்லாமல் தமைப்படைத்த இறைவனுக்காய் தம் உயிரையும் தியாகம் செய்து ரண களம் நுழைந்த நபித்தோழர்கள் (ஸகாபாக்கள்)  வாழ் வெட்டுக்கு, அம்பு துளைப்புக்கு ஆளாகிக் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடைக்கையிலே  அவல ஓலம் வருகிறதாம். ”தண்ணீர், தண்ணீர்....தண்ணீர்......”   ரண களத்திலே மனிதாபிமான சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் தண்ணீருடன்  சத்தம் வரும் திசை நோக்கி ஒடுகிறாராம்.  அவர் தண்ணீருடன் அங்கு சென்றபோது  இன்னுமொரு திசையில் இருந்து அதே மாதிரியான அபயக் குரல் வருகிறதாம்.  முதலில் தண்ணிர் கேட்டவர் சொல்கிறாராம் “அங்கே யாரோ தண்ணிர் கேட்கிறார்கள் அங்கே கொண்டு போங்கள்” என்று.  தண்ணீர் அங்கே செல்லும்போது அவர் உயிர் பிரிந்திருந்ததாம், முன்னயவருக்காவது கொடுக்கலாம் என ஓடிச் சென்றால் அங்கே அவர் உயிரும் பிரிந்திருந்ததாம்.

இந்த வீரத் தியாகப் பதிவுகளையெல்லாம் வாய்கிழிய பேசுகின்றவர்கள், நாளைய  வெய்யிலின் காட்டத்துக்கு நேற்று நிழல் மரம் நட்டிய  தாணைத் தளபதியின் பொறுப்பில் உள்ள குவைத் வைதியசாலையில் இரண்டு அம்பியுலன்ஸ் வண்டிகளை வைத்திருக்கிறார்கள்.   தினமும்  மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் மாத்திரம்  ஒரு தர்ம வைத்தியாசலையாக இயங்கும் பரிதாபத்துக்குரியதும்,  ஸகாத் நிதியத்தால் கட்டப்பட்டதும் முற்றாகச் செயலிழந்து போயுள்ள இந்த வைத்தியசாலையின்  இரண்டு அம்பியுலன்ஸ் வண்டிகளில் ஒன்றை  அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வாகனமாக உபயோகித்து மற்றயதை  மோசடிக் கும்பல்லின் அதிகாரம் உள்ளவர்கள்  சாரதி பயிற்சி செய்யவும், குர்பான் இறைச்சி பகிரவும், இன்னோரன்ன பிற தேவைகளுக்குமாகப் பாவிக்கிறாரகள்.   

அந்த வைத்தியசாலையில் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பல மில்லியன்கள் பெறுமதியான  அதி நவீன உபகரணங்கள், வைத்தியசாலைத் தளபாடங்கள், இந்த அம்பியுலன்ஸ் வண்டிகளை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கும், கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலை போன்றவற்றுக்கும் கொடுங்கள் என்று நாம்  கோருகிறோம்.  அது தமது அப்பன் பாட்டன் சொத்து என்று இந்த ”ஜஇ”க்கள்  அடித்துச் சொல்கிறாரகள். 

இப்போது நான் முன்னர் உங்களை விட்டுச் சென்ற இடத்துக்கு மீண்டும் அழைத்து வருகிறேன்.  அங்கே யாரோ செய்த பழியை யாருடைய தலையிலோ போடுகிறார்கள்  அவர்கள்.  ஆனால் இங்கே  புத்தளம் மக்களுக்கான ஸகாத் நிதி‌யில் கட்டப்பட்ட குவைத் வைத்தியசாலையை  நாளைய வெயிலுக்காக நேற்று நாட்டப்பட்ட தனியார் சொத்து என்று சொல்கிறார்கள்.  இவர்கள் முஸ்லிம்கள்.   அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் என்னதான் வித்தியாசம் என்று பாருங்களேன்.

அசவரமாக புத்தளத்துக்கு கொண்டுவரப்பட வேண்டிய நோயாளியரைக் கொண்டுவர இருந்த ஒரேயொரு வண்டியையும் கொத்தாந்தீவு மக்கள் இழந்து நிற்கிறார்கள்.  ஒன்றைக் கொடுங்கள் என்று சொன்னால்  இவர்களுக்கு பொத்துக் கொண்டு வருகிறது. 

நாளைய வெய்யிலின் கொடுமையிலிருந்து தற்காப்புப் பெறுவதற்கான நேற்று நிழல் மரம் நாட்டிய தாணைத் தளபதியிடம் ஒரு வினா?  குவைத் வைத்தியசாலையில் உள்ள அம்பியுலன்ஸ் வண்டிகள் தொடர்ந்தும் குர்பான் இறைச்சி பகிரவும், சாரதி பயிற்சி பெறவும் உயபோகிக்கப் படுமானால் நாளை நரக நெருப்பின் காட்டத்தில் இருந்து உங்களை எந்த மரம் காப்பாற்றப் போகிறது?

 

Read 846 times Last modified on Friday, 16 June 2017 16:43
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization