முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி! Featured

(1 Vote)
முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!
13 November
2014
Written by:

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு மாதங்களாக புத்தளம் அறங்கால் சொத்துக்களின் மீட்பக்குழு சமூகவலை தளங்கள் ஊடாகவும் களத்திலும்போராட்டத்தை மேற்கொள்கின்றது.

எனினும் இலங்கை ஜமாதே இஸ்லாமி இச்சொத்துக்கள் மீதான தனது இரும்புக் கரத்தைத் தளர்துவதாக இல்லை. குவைத் ஹொஸ்பிடல் தமது தனிப்பட்ட சொத்து அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை யில்லை என்ற நிலைப்பாட்டில், பல மாதங்களாக புத்தளம் அறங்கால் சொத்துக்களின் மீட்பக்குழு  சமூக வலை தளங்கள் ஊடாகவும் களத்திலும் முயன்று வந்த போதும் இன்னும் எந்த மாற்றத்தையும் அவர்களால் காணமுடியவில்லை. 

புத்தளம் அறங்கால் சொத்துக்களின் மீட்பக்குழு குவைத் ஹொஸ்பிடல் தொடர்பில் ஜமாதே இஸ்லாமியின் நிலைப்பாடு தவறானது, சமூகத் துரோகச் செயல், அமாநிதம் பற்றி பொறுப்பற்ற செயல் என்பதனைத் தொடர்ந்தும் முன்னிருத்தி போராடி வருகின்றது. 

சில நாட்களுக்கு முன்னர் இம்மீட்பக்குழு கௌரவ இம்தியாஸ் பாகீர்மார்கார் (முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு  ஒரு மனுவை சமர்பித்து குவைத்  ஹொஸ்பிடல்   விவகாரமாகத் தலையிடுமாறு வேண்டியதை வாசகர்கள் அறிவீர்கள். 



அடுத்தகட்டமாக இம்மீட்பக்குழுவினர் ஜமாதே இஸ்லாமியுடன் மிக நெருக்கமான தொடர்புள்ள புத்தளம் நகரசபை உறுப்பினர் முஹ்சி அவர்களைத் தொடர்பு கொண்டு சகாத் நதி மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட இம்மருத்துவ உபகரணங்கள் பாவிக்கப்படாமல் அழிந்து போகும் நிலை குறித்து குறிப்பிட்டு இது குறித்த ஆவன செய்ய முன்வருமாறு வேண்டியது. அவர்களது பேச்சில் நியாயம் இருப்பதனை உணர்ந்த முஹ்சி அவர்கள் உரிய தரப்பினருடன் இது குறித்து கதைத்து தம்மால் முடிந்ததை செய்வதற்கு உடன்பட்டார்.

உடன்பட்டது போன்றே முஹ்சி அவர்கள் ஜமாதே இஸ்லாமியின் குவைத் ஹொஸ்பிடலுக்குப் பொறுப்பான நபர்களுடன் தொடர்பு கொண்டு இது குறித்து விரசாரித்துள்ளார்.  மாநகர சபை உறுப்பினர் முஹ்சி அவர்களுக்கு வழங்கிய பதிலில்  "தாம் குவைத் ஹொஸ்பிடலில் எந்தவிதமான மோசடிகளிலும் ஈடுபடுவதில்லை. அப்படி யாராவது கருதுவார்களாயின் சுகாதார அமைச்சுக்கு இது குறித்து தெரிவிக்கலாம். சுகாதார அமைச்சு இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் எனின் நாம் பதில் கொடுக்கத் தயாராக உள்ளோம்" என்பதாகக் குறிப்பிட்டதாக முஹ்சி அவர்கள் குறிப்பிட்டார்.

சாகத் பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட இவ்வைத்தியசாலையைத் தனியார் நிறுவனமாகப் பதிவு செய்த ஒரே காரணத்திற்காக இங்குள்ள பல கோடி ரூபாக்கள் பெறுமதியான  மருத்தவச் உபகரணங்கள் யாருக்கும் பயன்படாமல் அழிந்து போவதை எற்க முடியாது என்பதாகவும் இப்பிரச்சினையை இயன்றவரையில் பெரிது  படுத்தாமல்  இவ்வுபகரணங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவதற்கே முயற்சிக்கின்றொம் என்பதாக புத்தளம் அறங்கால் சொத்துக்களின் மீட்புக்குழு  முஹ்சி அவர்களுக்கு தொடர்ந்து விளக்கினர்.

அதனைத் தொடர்ந்து மாநகரசபை உறுப்பினர் முஹ்சி அவர்கள் இது குறித்து குறிப்பிடுகையில் தானும் இந்த நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அங்குள்ள மருத்தவ உபகரணங்கள் பயன்படுத்த வில்லையெனில் அவற்றைச் சுற்றியுள்ள தளவைத்தியசலை உள்ளிட்ட இதர வைத்திய சாலைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் இது தொடர்பில் தன்னால் முடிந்த அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதாகவும்  புத்தளம் அறங்கால் சொத்துக்களின் மீட்புக்குழுவிடம் மாநகரசபை உறுப்பினர் முஹ்சி அவர்கள்  குறிப்பிட்டுள்ளார். 

Read 1905 times Last modified on Friday, 14 November 2014 02:52
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization